Tuesday, December 20, 2011

பிஃபோர் சன்ரைஸ்(Before sunrise) - திரைப்பட விமர்சனம்/மதிப்பீடு


Before sunrise:
ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும் முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத ஒரு இளைஞனும், இளைஞியும் மெல்ல பேச ஆரம்பித்து, அதனபின் ஒரு நாளை இருவரும் வியன்னாவில் ஒன்றாக செலவிடலாம் என முடிவெடுக்கின்றனர்.  அந்த ஒரு நாளில் இருவரும் என்ன செய்கிறார்கள்/பேசிக்கொள்கிறார்கள் எனபதுதான் இந்த முழுப்படமும்.

ஒரு ஆணும் பெண்ணும் பேசுகிறார்கள் இதுதான் படம், அவர்கள் எப்படி பேசிக்கொற்வார்கள், என்னவெல்லாம் பேசிக்கொள்வார்கள் என்பதை கன கச்சிதமாக யோசித்து படத்தின் வசனமாக வைத்திருக்கிறார்கள்.  படத்தின் மிகப் பெரிய பலம் வசனங்களும், திரைக்கதையும்.  முன்பின் தெரியாதவர்களாக பேச ஆரம்பிக்கும்போது என்ன/எப்படி பேசுகிறார்கள் நடந்து கொள்கிறார்கள், சில மணிநேரம் கழித்து பேச்சு எப்படி மாறுகிறது அவர்களுக்கிடையே அன்யோன்யம் எப்படி மாறுகிறது என்பது அற்புதமாக படத்தில் காட்டப்பட்டுள்ளது.

ஒரு ஆண் பெண் இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய புரிதல் உள்ளது இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துள்ளது, ஆனாலும் ஒரு சிறு அறையில் (ஒரு இசை ஆல்பத்தின் இசைத்தட்டை ஒரு  Trial roomல் பாடவிட்டு கேட்கும்போது) இருவரும் கண்பார்த்து பேசமுடியாமல் தவிக்கும் ஒரு காட்சியில் இருவரின் நடிப்பும் அவ்வளவு அற்புதம்.

பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.. எனது மதிப்பீடு 7.5/10

Wednesday, November 9, 2011

பாஸ் லினக்சு நிறுவல் குறித்த தமிழக அரசின் அரசாணை.

தமிழக அரசின் மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தில் வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளில் பாஸ் லினக்சு நிறுவப்பட்ட பிறகு அதன் பரவல் அதிகரித்துள்ளது.  தற்போது பாஸ் லினக்சின் கிரீடத்தில் மற்றுமொரு இறகு சேர்ந்துள்ளது.  ஆம் தமிழக அரசு நவம்பர் 9 அன்று வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தமிழக அரசின் தகவல்தொழில்நுட்பதுறையில் பாஸ் லினக்சு நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. 

இது கட்டற்ற/திறந்த மூல மென்பொருள்(FOSS - Free or Open Source Software) ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய ஒரு செய்தியாகும்.  ஏற்கனவே இந்திய அரசு வெளியிட்ட ஒரு அரசாணையில் வன்பொருள் வழங்கும்/உற்ப்பத்தி செய்யும் நிறுவனங்கள் லினக்சு போன்ற கட்டற்ற/திறந்த மூல மென்பொருளுடன்(FOSS) ஒத்திசைவுடன் இருக்கவேண்டும் என கூறியுள்ளது.  இந்திய அரசுடன், தமிழக அரசும் கைகோர்த்து தற்போது கட்டற்ற/திறந்த மூல மென்பொருளின் பக்கம் திரும்பியுள்ளது கண்டிப்பாக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

Monday, October 3, 2011

லினக்சு இயங்கதளத்தில் தமிழ் வலைப்பூ/வலைதளங்களின் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக தெரியாததை சரி செய்வது எப்படி?


சென்ற வாரம் ஆனந்த விகடனில் கவிஞர் அறிவுமதியின் வலைப்பூவை பற்றி அறிந்துகொண்டதும்(http://aruvumathi.blogspot.com) அதை படிக்க வேண்டி என்னுடைய லினக்சு இயங்கதள கணிணியில் ஐஸ்வீசல்(iceweasel) உலாவியில் திறந்தேன், ஆனால் தமிழ் எழுத்துகள் தெளிவாக இல்லை :(.... அதை சரிசெய்ய தேடி கடைசியாக கீழ்கண்ட எளிய வழியை கண்டறிந்தேன்.
உங்களுடைய கணிணியிலிருக்கும் FreeSans.ttf, FreeSerif.ttf எழுத்துருக்களை நீக்குவதே அந்த எளிய வழி.... ;) சரி அதை எப்படி செய்வது...?


உங்கள் கணினியில் "/usr/share/fonts/truetype/freefont/" என்ற அடைவிற்குள்(directory/folder) சென்று "FreeSans.ttf, FreeSerif.ttf" என்ற இரு எழுத்துரு கோப்புகளை நீக்கவும்.
இப்பொழுது உங்கள் உலாவியை(browser) மறுதுவக்கம் செய்யவும்.  அவ்வளவேதான்... இப்போது எல்லா தமிழ் எழுத்துருக்களும் தெளிவாக தெரியும். :)