Tuesday, December 20, 2011

பிஃபோர் சன்ரைஸ்(Before sunrise) - திரைப்பட விமர்சனம்/மதிப்பீடு


Before sunrise:
ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும் முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத ஒரு இளைஞனும், இளைஞியும் மெல்ல பேச ஆரம்பித்து, அதனபின் ஒரு நாளை இருவரும் வியன்னாவில் ஒன்றாக செலவிடலாம் என முடிவெடுக்கின்றனர்.  அந்த ஒரு நாளில் இருவரும் என்ன செய்கிறார்கள்/பேசிக்கொள்கிறார்கள் எனபதுதான் இந்த முழுப்படமும்.

ஒரு ஆணும் பெண்ணும் பேசுகிறார்கள் இதுதான் படம், அவர்கள் எப்படி பேசிக்கொற்வார்கள், என்னவெல்லாம் பேசிக்கொள்வார்கள் என்பதை கன கச்சிதமாக யோசித்து படத்தின் வசனமாக வைத்திருக்கிறார்கள்.  படத்தின் மிகப் பெரிய பலம் வசனங்களும், திரைக்கதையும்.  முன்பின் தெரியாதவர்களாக பேச ஆரம்பிக்கும்போது என்ன/எப்படி பேசுகிறார்கள் நடந்து கொள்கிறார்கள், சில மணிநேரம் கழித்து பேச்சு எப்படி மாறுகிறது அவர்களுக்கிடையே அன்யோன்யம் எப்படி மாறுகிறது என்பது அற்புதமாக படத்தில் காட்டப்பட்டுள்ளது.

ஒரு ஆண் பெண் இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய புரிதல் உள்ளது இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துள்ளது, ஆனாலும் ஒரு சிறு அறையில் (ஒரு இசை ஆல்பத்தின் இசைத்தட்டை ஒரு  Trial roomல் பாடவிட்டு கேட்கும்போது) இருவரும் கண்பார்த்து பேசமுடியாமல் தவிக்கும் ஒரு காட்சியில் இருவரின் நடிப்பும் அவ்வளவு அற்புதம்.

பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.. எனது மதிப்பீடு 7.5/10