Tuesday, June 26, 2012

படித்துக்கொண்டிருக்கும் இணையதளப்பக்கத்தை பிடிஎஃப் கோப்பாக(webpage to pdf) சேமிப்பது எப்படி?


  அடிக்கடி உங்களுக்கு இப்படி ஒரு யோசனை வந்திருக்குமே... இணையத்துல உலாவிகிட்டிருக்கம்போது தீடீர்னு ஒரு பக்கம் உங்களுக்கு ரொம்ப புடிச்சிபோயிடும், ஆனா அந்த பக்கம் ரொம்ப நீளமா இருந்திருக்கும்.  உடனே இந்த பக்கத்த சேமிச்சு வச்சிக்கிட்டு [சேவ்(save) பண்ணிக்கிட்டு] அப்புறமா படிக்கலாம்னு தோணும்.  என்ன பண்ணூவீங்க..? File -> save/save as (அப்டி இல்லனாக்க குறுக்குவிசை[short cut] ctrl+s) கொடுத்து சேவ்(save) பண்ணுவீங்க.  இங்க என்ன பிரச்சனைனா அந்த ஒரு பக்கம் ஒரு .html கோப்பாவும் அந்த ஒரு .html கோப்புக்கு துணை கோப்புகளா(supporting files) சில பட கோப்புகளும், மற்ற சில கோப்புகளும் சேவ் ஆகும்.  ஒருவேளை நீங்க மறந்துபோயி ஏதாவது ஒரு கோப்பு இல்லனா ஒரு அடைவினை(directory) அழிச்சிட்டா(delete), நீங்க சேவ் பண்ண பக்கம் ஒழுங்கா தெரியாது.  இது மட்டுமில்லாம நீங்க சேவ் பண்ண மொத்த கோப்புகளோட அளவும்(size) அதிகமா இருக்கும்.

இதெல்லாத்துக்கும் பதிலா நீங்க பாத்துக்கிட்டிருக்க அந்த பக்கத்த ஒரு ஒற்றை பிடிஎஃப் கோப்பா சேமிச்சுட்டா ரொம்ப எளிமையா போயிடும் இல்லயா....? :).
நாம் இதை 2 வழிகளில் செய்யலாம்,
வழிமுறை 1.
இந்த வேலைய செய்யறத்துக்குனே ஒரு தனி இணையதளமே(website) இலவசமா இயங்கிட்டிருக்கு. [இத அந்த இணையதளம் ஒரு இலவச இணையசேவையா(webservice) தராங்க.  [இணையசேவைனா என்னன்னு இன்னோரு பதிவில்/இடுகையில்(blog post) பார்ப்போம்.] நீங்க செய்ய வேண்டியதெல்லாம் படிச்சிட்டிருக்கிற அந்த பக்கத்துடைய சுட்டி(link or URL(Uniform Resource Locator)), அதாங்க முகவரி பெட்டி(address-bar)-ல இருக்குற அந்த வரிய அப்புடியே காப்பி(copy) பண்ணி அத http://pdfmyurl.com(இணையதளத்தோட பேரே விஷயத்தை சொல்லிடுது) அப்டீன்ற இந்த இணையதளத்துல கொடுத்தா போதும் அத அவங்க ஒரேயொரு பிடிஎஃப் கோப்பா மாத்தி கொடுத்துடும்.  அத சேவ் பண்ணிக்கோங்க.. அவ்ளோதான்.
pdfmyurl.com
மேல இருக்குற படத்துல நீல வண்ண அம்புக்குறி காட்டுற இடத்துல உங்க link address போட்டுட்டு சிகப்பு வண்ண அம்புக்கறி காட்டுற இடத்துல இருக்குற "P" அப்டீன்ற பட்டனை அழுத்துங்க நீங்க கொடுத்த பக்கத்தை பிடிஎஃப் கோப்பா மாத்திட்டு அத எங்க சேவ் பண்றதுனு ஒரு தகவல் பெட்டி வரும் அதுல கோப்புக்கு ஒரு பேர போட்டு சேவ் பண்ணிக்கோங்க அவ்ளோதான். ;-)

வழிமுறை 2.

ரொம்பவே எளிமையான வழி இது.
 நீங்க பாத்துகிட்டிருக்குற பக்கம் உங்களுக்கு புடிச்சிடிச்சா உடனே CTRL+p(அச்செடுக்கறத்துக்கான) அப்டீன்ற குறுக்குவிசையை அழுத்துங்க ஒரு சின்ன window திறக்கும் அதுல 'Print to file'  (அ) 'Print file' அப்டினு ஒரு option இருக்கும் அதை தேர்ந்தெடுத்து சேமிக்கப்போற கோப்புக்கு ஒரு பெயரும், எங்க சேமிக்கனும்னு path கொடுத்து OK, Submit கொடுங்க அவ்ளோதான்...
 நீங்க எல்லாரும் எப்படியும் ஃபயர்பாக்ஸ்(Firefox), கூகுள் குரோம்(Google Chrome), குரோமியம்(Chromium), ஒபேரா மாதிரியான உலாவிகளதான் பயன்படுத்துவீங்கனு நம்பறேன்.  எல்லா செயலிகள்ளேயும்(Applications) இருக்குற மாதிரி உலாவிகளிளும்(Browser) அச்செடுப்பதற்க்கு(Print) ஒரு option ஏதாவது ஒரு menubar-ல இருக்கும் 90% பெரும்பாலும் 'File' menu-ல இருக்கும்.  அதுல mouse click பண்ணுங்க இல்லனா ctrl+p விசையை பயன்படுத்துங்க..