Wednesday, July 4, 2012

கூகிளில் சிறப்பாக தேடுவது எப்படி? பாகம் - 1 (google search part 1)

கூகிளில் தேடுவதற்க்கு ஒரு இடுகை தேவையா என்று எண்ணலாம்.  நாம்தான் தினமும் தேடுகிறோமே அப்புறமென்ன இருக்கிறது கூகிளில் இன்னமும் சிறப்பாக தேட என்கிறீற்களா..?  உண்மையாக சொல்றதுனா கூகிள் தேடலை, கேட்டத கொடுக்குற காமதேனு, அட்சயபாத்திரம், கற்பகவிருட்சத்துக்கூட ஒப்பிடலாம்(அதுக்காக நீங்க ஆறாப்புல படிச்சப்ப தொலைச்ச பென்சில கூகிள்ட்ட தேடித்தர சொன்ன தராது).  ஆனா அத வச்சு நாம எப்புடி தேடறொம் அப்டின்றதுலதான் இருக்கு சூட்சுமம்.  சரி வாங்க சிறப்பா தேடலாம்.

1. இரட்டை மேற்கோள் குறி தேடல் - "தேடவேண்டிய விஷயம்" (double quotes search)
searching without quotes
search without quote
உங்களுக்கு இந்தியாவோட வரலாறு வேணும்னா என்ன பண்ணுவீங்க history of india அப்டீனு தேடுவீங்க இல்லயா.. இப்படி தேடும்போது கூகுள் history, india அப்டீன்ற 2 வார்த்தையதான் தேடும்.  அதாவது இந்த 2 வார்த்தை இருந்தாலும், 2-ல ஏதாவது ஒரு வார்த்தை இருந்தாலும், அது எல்லாமே தேடல் முடிவுகளா வந்துடும்.  அப்படீனா history of england-னு ஒரு பக்கம் இருந்து அதுல ஏதாவது ஒரு இடத்துல india அப்டீனு ஒரு வாரத்தை இருந்தா அந்த பக்கமும் தேடல் முடிவுகளில் வந்துடும்.  ஆனா நாம தேடி வந்தது history of india-தான்.

search with quotes
search with quote
இங்கதான் இரட்டை மேற்கோள் குறி தேடல் உதவும்.  இந்த தேடல் நீங்க ""-குறிக்குள்ள என்ன கொடுக்குறீங்கலோ அந்த வாக்கியத்தை அப்படீயே தேடும், அதாவது history of india அப்டீன்ற வாக்கியம் இருக்குற பக்கத்த மட்டும் தான் தேடல் முடிவுல தரும்.  கீழே இருக்குற படத்துல தேடல் முடிவுகளோட எண்ணிக்கைய பாருங்க புரியும் ;)




2. தேடலில் வரும் முதல் முடிவைத்தான் படிக்கப்போகிறேன் - I am feeling lucky
தேடலின் முடிவுகளில் முதலாவதாக வரும் சுட்டி(link)யைதான் பார்க்கப்போகிறார்களா.. அப்படினா 'google search'-க்கு பதிலா அதுக்கு பக்கத்லயே இருக்குதுபாருங்க இன்னொரு பொத்தான்(button) 'I am feeling lucky' அப்டீனு அத அமுக்குங்க நேரா தேடலில் வர முதல் லிங்க்குக்கே கூட்டிப்போயிரும்.   கீழே இருக்குற படத்துல I am feeling lucky button வட்டம்போட்டு காட்டியிருக்கு
i am feeling lucky
i am feeling lucky

3. பிடிஎஃப்(pdf) கோப்பு(file) மட்டும்தான் வேண்டும் - தேடவேண்டிய விஷயம் filetype:pdf
 சரி எனக்கு திருக்குறள் சம்மந்தப்பட்ட pdf கோப்பு வேணும் எப்படி தேடுவீங்க..? 'Thirukkural' அப்டீனு அடிச்சி தேடுனா தமிழ்விக்கிப்பீடியாவுல ஆரம்பிச்சு உங்களுக்கு தேவையேயில்லாத எதையெல்லாமோ காட்டுதா... ஆனா ஒரு pdf கூட இல்ல.  சரி 'Thirukkural pdf' அப்டீனு தேடலாமா.. ஆங் இப்ப பாத்தா அங்கொன்னும் இங்கொன்னுமா ஒண்ணு, ரெண்டு pdf கோப்பு மட்டும் இருக்கா.. :).  கொஞ்சம் இருங்க இன்னுங்கூட சிறப்பா தேடலாம் எப்புடி..? இப்புடி
'thirukkural filetype:pdf' அப்டூனு தேடிப்பாருங்க.. அட்டா வந்துருக்குற எல்லாமே pdf தான்.

இது pdf-க்கு மட்டுமில்ல ppt, doc, odt அப்டீனு எதுக்குவேணாலும் பயன்படுத்தலாம்.  செய்ய வேண்டியதெல்லாம் "[நீங்க தேடவேண்டியது] filetype:[என்ன வகையான கோப்பு வேண்டுமோ அதோட பின்னொட்டு/நீட்சி(suffix/extention)]" அப்டீனு போட்டு கூகுள்ள தேடுங்க.

4. ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம்(அருஞ்சொற்பொருள்) தேட - define:ஆங்கில வார்த்தை (முக்காற்புள்ளி(colon)->: இல்லாமல் define ஆங்கில வார்த்தை எனவும் தேடலாம்)
ஒரு ஆங்கில வார்த்தைக்கு(எ-கா:podium-ற வார்த்தை) பொருள் தெரியலனா உடனே கூகிளில் meaning podium அப்டீனு தேடுவோம் இல்லயா.. இப்படி தேடுனா அது ஒரு online dictionary பக்கத்துக்கு போகும், அப்புறம் அந்த பக்கத்துக்குப்போய் அரத்தம் பாக்கணும்.  ஆனா define podium அப்டீனு தேடுனா நமக்கு தேவையான அர்த்தம் உடனே கிடைக்கும்.  படத்தைப்பாருங்க


இந்த இடுகையோட அடுத்த பாகத்துல இன்னும் சிறப்பா தேடலாம் கொஞ்சம் காத்திருங்க.. ;)


Tuesday, June 26, 2012

படித்துக்கொண்டிருக்கும் இணையதளப்பக்கத்தை பிடிஎஃப் கோப்பாக(webpage to pdf) சேமிப்பது எப்படி?


  அடிக்கடி உங்களுக்கு இப்படி ஒரு யோசனை வந்திருக்குமே... இணையத்துல உலாவிகிட்டிருக்கம்போது தீடீர்னு ஒரு பக்கம் உங்களுக்கு ரொம்ப புடிச்சிபோயிடும், ஆனா அந்த பக்கம் ரொம்ப நீளமா இருந்திருக்கும்.  உடனே இந்த பக்கத்த சேமிச்சு வச்சிக்கிட்டு [சேவ்(save) பண்ணிக்கிட்டு] அப்புறமா படிக்கலாம்னு தோணும்.  என்ன பண்ணூவீங்க..? File -> save/save as (அப்டி இல்லனாக்க குறுக்குவிசை[short cut] ctrl+s) கொடுத்து சேவ்(save) பண்ணுவீங்க.  இங்க என்ன பிரச்சனைனா அந்த ஒரு பக்கம் ஒரு .html கோப்பாவும் அந்த ஒரு .html கோப்புக்கு துணை கோப்புகளா(supporting files) சில பட கோப்புகளும், மற்ற சில கோப்புகளும் சேவ் ஆகும்.  ஒருவேளை நீங்க மறந்துபோயி ஏதாவது ஒரு கோப்பு இல்லனா ஒரு அடைவினை(directory) அழிச்சிட்டா(delete), நீங்க சேவ் பண்ண பக்கம் ஒழுங்கா தெரியாது.  இது மட்டுமில்லாம நீங்க சேவ் பண்ண மொத்த கோப்புகளோட அளவும்(size) அதிகமா இருக்கும்.

இதெல்லாத்துக்கும் பதிலா நீங்க பாத்துக்கிட்டிருக்க அந்த பக்கத்த ஒரு ஒற்றை பிடிஎஃப் கோப்பா சேமிச்சுட்டா ரொம்ப எளிமையா போயிடும் இல்லயா....? :).
நாம் இதை 2 வழிகளில் செய்யலாம்,
வழிமுறை 1.
இந்த வேலைய செய்யறத்துக்குனே ஒரு தனி இணையதளமே(website) இலவசமா இயங்கிட்டிருக்கு. [இத அந்த இணையதளம் ஒரு இலவச இணையசேவையா(webservice) தராங்க.  [இணையசேவைனா என்னன்னு இன்னோரு பதிவில்/இடுகையில்(blog post) பார்ப்போம்.] நீங்க செய்ய வேண்டியதெல்லாம் படிச்சிட்டிருக்கிற அந்த பக்கத்துடைய சுட்டி(link or URL(Uniform Resource Locator)), அதாங்க முகவரி பெட்டி(address-bar)-ல இருக்குற அந்த வரிய அப்புடியே காப்பி(copy) பண்ணி அத http://pdfmyurl.com(இணையதளத்தோட பேரே விஷயத்தை சொல்லிடுது) அப்டீன்ற இந்த இணையதளத்துல கொடுத்தா போதும் அத அவங்க ஒரேயொரு பிடிஎஃப் கோப்பா மாத்தி கொடுத்துடும்.  அத சேவ் பண்ணிக்கோங்க.. அவ்ளோதான்.
pdfmyurl.com
மேல இருக்குற படத்துல நீல வண்ண அம்புக்குறி காட்டுற இடத்துல உங்க link address போட்டுட்டு சிகப்பு வண்ண அம்புக்கறி காட்டுற இடத்துல இருக்குற "P" அப்டீன்ற பட்டனை அழுத்துங்க நீங்க கொடுத்த பக்கத்தை பிடிஎஃப் கோப்பா மாத்திட்டு அத எங்க சேவ் பண்றதுனு ஒரு தகவல் பெட்டி வரும் அதுல கோப்புக்கு ஒரு பேர போட்டு சேவ் பண்ணிக்கோங்க அவ்ளோதான். ;-)

வழிமுறை 2.

ரொம்பவே எளிமையான வழி இது.
 நீங்க பாத்துகிட்டிருக்குற பக்கம் உங்களுக்கு புடிச்சிடிச்சா உடனே CTRL+p(அச்செடுக்கறத்துக்கான) அப்டீன்ற குறுக்குவிசையை அழுத்துங்க ஒரு சின்ன window திறக்கும் அதுல 'Print to file'  (அ) 'Print file' அப்டினு ஒரு option இருக்கும் அதை தேர்ந்தெடுத்து சேமிக்கப்போற கோப்புக்கு ஒரு பெயரும், எங்க சேமிக்கனும்னு path கொடுத்து OK, Submit கொடுங்க அவ்ளோதான்...
 நீங்க எல்லாரும் எப்படியும் ஃபயர்பாக்ஸ்(Firefox), கூகுள் குரோம்(Google Chrome), குரோமியம்(Chromium), ஒபேரா மாதிரியான உலாவிகளதான் பயன்படுத்துவீங்கனு நம்பறேன்.  எல்லா செயலிகள்ளேயும்(Applications) இருக்குற மாதிரி உலாவிகளிளும்(Browser) அச்செடுப்பதற்க்கு(Print) ஒரு option ஏதாவது ஒரு menubar-ல இருக்கும் 90% பெரும்பாலும் 'File' menu-ல இருக்கும்.  அதுல mouse click பண்ணுங்க இல்லனா ctrl+p விசையை பயன்படுத்துங்க..

Thursday, May 31, 2012

வெற்றித்திருமகன் விஸ்வநாதன் ஆனந்த்(Viswanathan Anand)..


டென்னிஸ் சாம்ராஜ்யத்திற்கு ஒரு ரோஜர் ஃபெடரர் போல்,  கோல்ஃப் சாம்ராஜ்யத்திற்கு ஒரு டைகர் உட்ஸ் போல்,  சதுரங்க சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி விஸ்வநாதன் ஆனந்த்.

Tuesday, May 8, 2012

நொ மேன்'ஸ் லேண்ட்(No Man's Land-2001 Bosnian movie) - போஸ்னிய மொழித் திரைப்படம் ஒரு பார்வை


கன்னிவெடியில் மாட்டிக்கொண்ட ஒருவனின் கதி என்னவாகிறது என்கிற ஒரு வரி விஷயம்தான் கதை.

 கதை சொல்லப்பட்டவிதமும், திரைக்கதையும்(இயக்குனரின் பெயர் டேனிஸ் டனோவிக்)  உங்களைப்  படத்திலிருந்து ஒரு நொடி கூட இப்படி அப்படி நகரவிடாது.  படத்தில் 3-லிருந்து 5 பேர் மட்டுமே மிக முக்கிய கதாபாத்திரங்கள், மற்ற அனைத்தும் ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்துபோகக்கூடிய சிறிய பாத்திரங்கள் மட்டுமே.  படத்திற்கு imdb-ல் 8.0 மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளது(பலரின் ஓட்டுகளின் சராசரி).  இரு நாடுகளின் எல்லையில் கதை துவங்குகிறது, ஒரு வழிகாட்டியின் வழிகாட்டுதல்படி ஒரு நாட்டின் வீரர்கள்அணியாக வருகிறார்கள் அதிகப்படியான பனிமூட்டததின் காரணமாக வழிதப்பி இரவில் ஒரு இடத்தில் தங்குகிறார்கள்.  மறுநாள் பொழுது விடிந்ததும் எதிரிநாட்டின் படைக்கருகில் தாங்கள் இருப்பதை அறிகிறார்கள் அதை அறிந்து சுதாரிக்கும்முன்பே தாக்குதலுக்கு ஆளாகி ஒருவனைத்தவிர(அவனும் இரண்டு புல்லட்டுகளை உடம்பில் சுமந்துகொண்டிருக்கிறான்) எல்லோரும் இறந்துவிடுகிறார்கள்.  எதிரிநாட்டு படை 2 பேரை அனுப்பி யாராவது உயிரோடு இருக்கிறார்களா.. பிரச்சனைகள் ஏதும் உண்டா என அறிந்துவர அனுப்புகிறது.  அவர்கள் இறந்துபோன ஒருவனை இழுத்துவந்து ஒரு சிறு குழி உண்டாக்கி அதில் ஒரு கன்னிவெடியை வைத்து அதன் மேல் அவன் பிணத்தை கிடத்தி கன்னிவெடியை செயலாக்குகிறார்கள்.  இறந்த உடலை தூக்கினால் கன்னிவெடி வெடித்துவிடும், அதனால் பிணத்தை தூக்க வரும் அவனைச்சேர்ந்த மற்ற ஆட்களும் அப்பொழுது இறந்துவிடுவார்கள் என்று 2 பேரில் ஒருவன் விளக்கமளிக்கிறான்.  அப்பொழுது பதுங்கியிருந்த அடிபட்ட எதிரி வீரன் 2 பேரில் ஒருவனை சுட்டுக்கொன்றுவிடுகிறான்.  இதன் பிறகு கொஞ்சநேரத்தில் கன்னிவெடியின் மேல் கிடத்தப்பட்டவன் மயக்கத்தில் இருந்து எழுகிறான் அவன் உண்மையில் சாகவில்லை.  அதன் பிறகு அந்த மூவருக்கும் இடையில் என்ன விதமான சம்பாஷனைகள் நடக்கிறது, அவனைக்காப்பாற்ற மற்ற இருவரும் என்ன யோசனை செய்கிறார்கள் அது செயலாக்கப்பட்டதா அவன் காப்பாற்றப்பட்டானா.. என்பதுதான் மீதிப்படம்.

இதற்க்கிடையில் ஊடகங்கள் தங்கள் சேனலை முன்னிலைப்படுத்த என்னவெல்லாம் தில்லாலங்கடி வேலைகளை செய்கின்றன,  அரசியல், இராணுவம், ஐநா(UN) பாதுகாப்புப்படை போன்றவற்றிற்க்கு போரின்போது என்னென்ன பிரச்சனைகள், நிர்பந்தங்கள் வருகின்றன... அவை எப்படி கையாளப்படுகின்றன என்பது அருமையாக காட்டப்படுள்ளது.

கன்னிவெடியில் மாட்டிக்கொண்டவனை காப்பாற்ற வரும் வல்லுனர், கன்னிவெடியினை பார்த்ததும் இவனை காப்பாற்ற முடியாது, அவன் முன்னரே இறந்துவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்.  கடைசியில் சூழலின் நிர்பந்தத்தாலும், கட்டாயத்தினாலும் அந்த கன்னிவெடியில் சிக்கிய மனிதன் காப்பாற்றப்படாமலே ஊடகத்திற்கும், வெளி உலகத்திற்கும் காப்பற்றப்பட்டதாக காட்டப்பட்டு படம் முடிகிறது.  படம் முடியும்போது எதுவெல்லாம் நாம் உண்மை என நம்புகிறோமோ அதில் பல உண்மைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை உணருவதும் அதனால்  உங்கள் மனம் கணத்திருப்பதும் உண்மை.

1 1/2 மணிநேரம் மட்டுமே ஓடும் சிறிய படம் ஆனால் கண்டிப்பாக எல்லோரும்(குறிப்பாக வித்தியாசத்தை விரும்பும் உலக சினிமா விரும்பிகள்) பார்க்கவேண்டிய திரைப்படம்.

விருதுகள்:
இந்த திரைப்படம் 2002-ம் ஆண்டிற்கான சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதையும், 2001 ஆண்டு சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்க்கான கோல்டன் குளோப் விருதையும், 2001-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளது.

குறிப்பு:
No man's land - என்கிற ஆங்கில வாக்கியத்திற்கு யாரும் இதுவரை ஆக்ரமிக்காத, குறிப்பாக இரு நாடுகளுக்கிடையே யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைக்குறிய நிலப்பகுதி என்று பொருள்.

மற்றுமொரு குறிப்பு:
இந்தப்படம் அயல்மொழித்திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதை வென்ற அதே 2001-ம் ஆண்டில்தான் இந்தியாவிலிருந்து இந்தி திரைப்படமான அமீர்கானின் 'லகான்' படமும் அயல்மொழித்திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதிற்கான போட்டியிலிருந்தது.