பயணம்&புகைப்படம்

புகைப்படங்களுக்கான என்னுடைய ஃபிளிக்கர்(Flickr) பக்கம் - http://flickr.com/photos/karthik4u

 திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்

மூலவர்: நித்ய கல்யாணப்பெருமாள்
தாயார்:  அகிலவல்லித் நாச்சியார்
தலம்: திருவிடந்தை

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்று. இது சென்னை-புதுச்சேரி கிழக்குகடற்கரை சாலையில் கோவளத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் (அ) வராகப்பெருமாள், தாயார் அகிலவல்லி நாச்சியார் ஆவர். மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது. தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஓரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-12, மாலை 3-8
பேருந்து விபரம்: திருவான்மியூரிலிருந்து 588,599(கிழக்கு கடற்கரைசாலை(ECR) வழியாக மாமல்லபுரம் வரை செல்லும் பேருந்துகள்)

குறிப்பு: உணவகங்கள், hotel or motel எதுவும் கிடையாது, ஆனால் கோவில் பிரசாதங்கள் சர்க்கரைப்பொங்கல், புளியோதரை இன்னபிற நல்ல சுவையுடன் சுடசுட தொன்னையில் கிடைக்கும் :).  திருவிடந்தை  நகரத்தின் சாயல் படியாததால் நித்ய கல்யாணப்பெருமாள் போலவே அழகாக இருக்கிறது.
---5-12-2011


செகந்திராபாத் & ஹைதராபாத் பயணம் - ஆகஸ்ட்-2011