கவிதை

25-07-17 -> உனக்கான என் முத்தங்கள்..

25-07-17 -> பசித்துப் பச

29-01-15 -> பேசா மொழி...

28-01-15 -> நீ பிடித்ததினால்..

01-01-15 ->  யாரோ ஒருவனின் புத்தாண்டு

19-11-14  -> கல்லூரி(காதல்) கணக்கு

17-11-14 -> கல்லூரி தோழி

05-11-14 -> தண்டனைச் சிறை
                -> நேரம் மாறுவதில்லை

03-04-14  -> கவிதை

18-06-13 -> பாப்பா கவிதை..

27-03-13 -> கவிதைகள்...

23-03-13 -> சமூகக் கவிதைகள்
22-03-13 -> தோழ(ழி)மைக் கவிதைகள்..

================================
14-4-12

துணிக்கடையில் நீ
எடுத்து பார்த்துவிட்டு
வைத்துவிட்ட ஆடைகள்
எல்லாம் நீ
உடுத்தி பார்த்துவிட்டு
வைத்துவிட்ட ஆடைகளை
பொறாமையோடுதான்
பார்க்கின்றன.


================================

"நான் அழகாக இருக்கிறேனா?" என்று
நீ உன் தெரு
தோழிகளில் ஒருத்தியிடம்
கேட்டுக்கொண்டிருக்கும் அதே
நேரத்தில்
அழகு உன் தெருவிலுள்ள
எல்லோருடமும் கேட்டுக்கொண்டுடிருந்தது
"நான் அவளைப்போல இருக்கிறேனா?" என்று

================================

உன்னொடு பெரிய
இம்சையாய் போய்விட்டது...
உறங்கிக் கொண்டிருக்கும்போது
உன்னைப் பற்றி
ஒரு கவிதை தோன்றி
விழிக்க வைத்துவிடுகிறது.

================================

என் நீண்டநாள்
சந்தேகம்
உன்னால் எப்போழுதும்
அழகாய் மட்டும்தான்
இருக்க முடியுமா?

================================

காதலித்தால்
வாழ்க்கை அழகாகும்
காதலிக்கப்பட்டால்
நாமே அழகாவோம்
நான் உன்னை காதலித்து
என் வாழ்வையும்
உன்னையும்
அழகாக்கிவிட்டேன்
ஒழுங்கு மரியாதையாக
நீயும் என்னை
காதலித்து
உன் வாழ்க்கையை
அழகாக்கிக்கொள்.

================================

என்னாயிற்று எனக்கு?
இப்பொழுதெல்லாம்
உன்னை நினைத்துக்கொண்டே
உறங்கி
உன் நினைவாய்
எழுந்திருக்கிறேன்
என்னை பற்றிய
நினைவாவது
இருக்கிறதா உனக்கு..?

================================

நீண்ட வரிசையில்
சாமி தரிசனத்திற்க்கு
நின்று
தீபாராதனையை காணும்
பகதன் போல்
மகிழ்ந்து உற்சாகமடைகிறேன்
உன்னிடமிருந்து வரும்
குறுந்தகவலுக்கு
காத்திருந்து அது
வரும்போது

================================

யாரிடமிருந்து
குறுந்தகவல்
வந்தாலும்
அது
உன்னிடமிருந்து
வந்ததாக இருக்க
வேண்டுமென்று
எண்ணிக்கொண்டே
அலைபேசியை
எடுக்கிறேன்.

================================

மணிமேகலையின்
அட்சய பாத்திரம்போல
நீ ஏதும்
அழகு பாத்திரம்
வைத்திருக்கிறாயா..?
இத்தனைபேர் கண்களும்
உன் அழகை
ரசித்தபின்னும்
அழகு குறையாமல்
அப்படியே இருக்கிறாயே..
14-4-12


=========================
நெரிசல் மிகுந்த
இரயில் பயணமும்
சுகமாகிவிடுகிறது
ஒரு குழந்தை அந்த
பெட்டியில் இருந்தால்..

=========================

ஓய்வாய் இருக்கும்போதும்
உன் நினைவாய்
இருக்கிறேன் என்றேன்
ஓய்வாய் இருக்கும்போது
மட்டும் தான்
என்னை நினைக்கிறாயா
என கேட்டு
சண்டை பிடிக்கிறாயே
என் அழகு சண்டைக்காரி

=========================

உன்னை நினைக்கும்போது
கவிதை வருகிறதா..
கவிதை எழுதும்போதெல்லாம்
உன்னை நினைக்கிறேனா..
தெரியவில்லை

=========================

துணி  உலர்த்த,
கூந்தல் சிக்கெடுக்க,
கீழ்வீட்டு குழந்தையை கொஞ்ச,
வத்தல் காயல்லொட
என எதற்கெல்லாமோ
வெளியில் வருகிறாய்
நான் பார்க்க வேண்டி...
இல்லையென்றால்
என்னைப்பார்க்க வேண்டி
ஒருமுறை வந்துவிடேன்..

=========================


அட.. உன்
கவிதையில்
அழகும் காதலும்
ததும்ப ஆரம்பித்துவிட்டதே
காதலிக்கிறாயா என
கண்சிமிட்டி கேட்கிறாய்
உனக்கு நான்
என்ன பதில் சொல்வது..


=========================


உன்னைப் பாரத்ததும்
என்னென்ன பேச
வேண்டும் என
ஓராயிரம் முறை
ஒத்திகை பார்த்திருந்தாலும்
உன்னைப் பார்த்ததும்
ஒன்றுகூட நினைவுக்கு
வருவதில்லை.


=========================

உன் அழகை
வர்ணிக்க
வாரத்தைகளை
தேடிக் கொண்டிருக்கிறேன்
வாசலில்
அழகாக நின்று
கொண்டிருக்கிறாய் நீ...


=========================

பனித்துளி
புல்லின் நுனியில்
சின்னஞ்சிறிய உலகம்
பனித்துளி


சில வருடங்களுக்கு முன் நான் எழுதியவை... 21-12-11 வலைப்பூவில் பதிவேற்றம்
=========================

மீண்டும் ஆவேனோ....
அம்மாவின் மடியில் தூக்கம்
அப்பா விரல்பிடித்து நடை
அந்திமாலை பெய்யும் மழை
மழையோடு வரும் மண்வாசம்
மழைவிட்டும் வானவில்
காலையில் வேலியின் தட்டான்கள்
பெருமாள் கோயில் வெண்பொங்கல்
பரிசாய் வாங்கிய பென்சில்
மாமா வந்த இரயில் டிக்கட்
ஞைக்கிள் டயர் ரேஸ்
மாலை நேர சில்லாட்டம்
வாடகைக்கு ஓட்டிய குட்டிசைக்கிள்
இரவின் வானத்து நட்சத்திரம்
இன்னும் இன்னும் எவ்வளவோ..
இத்தனையும் ரசிக்க வேண்டும்
மீண்டும் ஆவேனோ சிறு பிள்ளையாய்...


சில வருடங்களுக்கு முன் நான் எழுதியவை... 21-12-11 வலைப்பூவில் பதிவேற்றம்
=========================


எப்படியடி...?
ஆறாம் வகுப்பில்
ஆங்கிலம் பிடிக்வில்லை
எட்டாம் வகுப்பில்
கணக்கு பிடிக்கவில்லை
பத்தாம் வகுப்பில்
பாதிபாடங்கள் பிடிக்கவில்லை
பன்னிரண்டாம் வகுப்பில்
படிப்பே பிடிக்கவில்லை
ஆனால் எல்லா வகுப்பிலும்
உன்னை மட்டும் எனக்கு
எப்படியடி பிடித்திருந்தது..?


சில வருடங்களுக்கு முன் நான் எழுதியவை... 21-12-11 வலைப்பூவில் பதிவேற்றம்
=========================

முரண்பாடு
கடவுள் முன்
எல்லோரும் சமம்
ஆனால் பூசாரி முன்..?


சில வருடங்களுக்கு முன் நான் எழுதியவை... 21-12-11 வலைப்பூவில் பதிவேற்றம்
=========================

என்னை மறந்துவிடமாட்டாயே நீ...
என்கிறாய்
உன்னை மறந்தால் இறந்துவிடமாட்டேனா நான்...

[05-09-2011]
=========================

உன் அலுவல்களுக்கு இடையில்
என் நினைவும் கூட  இருக்குமா என்கிறாய்..
உன் நினைவுகளுக்கு இடையில் தானே
என் அலுவல்களே நடக்கின்றன..

[05-09-2011]
=========================

தினமும் நான் காலையில்
தாமதமாகவே விழிக்கிறேன்... என்று
என்னிடம் சொல்லி வருந்துகிறாயே...
உனக்கெங்கே தெரியப்போகிறது
நீ கோலம் போடும் அழகை ரசிக்கவே
பொழுது சீக்கிரம் புலர்கிறதென்று...

[17-5-2011]
=========================

புதிய ஆடையை அணிந்து வந்து
அழகாக இருக்கிறேனா என
கேட்கிறாய்...
உன்னை அணிந்துகொண்டு
ஆடை அல்லவா அழகாக இருக்கிறது..

[17-5-2011]
=========================

பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்தேன்
பயணம் முழுவதும் முழு நிலவும், உன் நினைவும்
கூடவே வந்தது...
நீயும் நிலவும் ஒன்றுதான்,
என்னை விட்டு விலகுவதும் இல்லை
என்னை கை விடுவதும் இல்லை..

[17-5-2011]
=========================

உனக்கென்ன சிரித்துவிட்டு
போய்விடுகிறாய்
சிக்கி தவிப்பது நானல்லவா..

[17-5-2011]
==========================

கொடுத்தால் குறையாதது
அறிவு மட்டுமல்ல உன் அழகும்தான்... :)
பார் கோலத்திற்கு அழகை கொடுத்துவிட்ட பிறகும்
நீ அழகாகவே இருக்கிறாய்..

[17-5-2011]
==========================

கலைந்து போகும் உன் காதோர
கூந்தலை நீ சரி செய்யும்போதெல்லாம்
கலைந்து போகிறேன் நான்...

[27-5-2011]
===========================


குழந்தையை நீ கொஞ்சும்போதேல்லாம்
நானும் ஆசைப்படுகிறேன் குழந்தையாக...

[27-5-2011]
===========================

1 comment: