உங்களுக்கு தெரியுமா..


கப்கேக்(cupcake), எகளேர்(Eclair), ஜிஞ்சர் பிரெட்(Ginger bread), ஹனிகோம்ப்(Honeycomb),ஐஸ்க்ரிம் சாண்ட்விச்(Icecream sandwich), ஜெல்லிபீன்(jelly bean) இவையெல்லாம் என்ன என்று தெரியுமா...?

இதெல்லாம் கூகிளின் மொபைல் இயங்குதளமான ஆன்ட்ராய்டு(Android OS)-ன் பல்வேறு பதிப்பு பெயர்கள்(Version Name) ஆகும்.  இதில் ஜிஞ்சர் பிரெட்(Ginger bread)தான் மொபைல் சந்தையில் 50% அதிகமான இடத்தைப்பிடித்துள்ளது.


புதிதாக அறிமுகமாகியிருக்கும்(2012) மாக் கணினி(Mac) இயங்குதளத்தின் பதிப்புபெயர்(Version Name) என்ன தெரியுமா?
Mountain Lion

உலகப்பொதுமறையான திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் திருக்குறளில் எந்த இடத்திலும் தமிழ் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.

மொத்தம் உள்ள 1330 திருக்குறளில், உச்சரிக்கும்போது உதடு ஒட்டாத குறள் 2 உள்ளது அவை எவை என்று தெரியுமா?
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். 

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செயதற் கரிய செயல்.


ரெப்போ ரேட்(Repo rate) மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட்(Reverse repo rate) என்றால் என்ன தெரியுமா? ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கடனாக தரும் ப்ணத்திற்கு விதிக்கும் வட்டி விகிதம் ரெப்போ ரேட்(Repo rate) எனப்படும்.
அதே ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கு பயனாக வழங்கும் வட்டி (விகிதம்) (Reverse Repo rate) எனப்படும்.

திரைப்பட விநியோகத்தில் கூறப்படும் 'FMS' என்றால் என்ன?
வெளிநாட்டு திரையீட்டு நிர்வாக உரிமம்(Foreigh Management Screening rights) என்பதன் சுருக்கமே FMS ஆகும்.

டூரிங் மெஷின் உருவாக்கத்தின் மூல கர்த்தாவும், கணினியிலின் தந்தை என்றும் போற்றப்படும் ஆலன் டூரிங் ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் தண்டனைக்கு ( தண்டனை வேதியியல் முறையில் ஆண்மையிழக்க வைத்தல் (ஆங்கிலம்:Castration - ஆண்விதை நீக்கல்; காயடித்தல்) )  உள்ளானார்.  அதனால் சயனைடு தடவிய ஆப்பிளைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

No comments:

Post a Comment