கணினியில் வேலை செய்பவர்களுக்கு விசைப்பலகைக்கும், சுட்டெலிக்கும் இடையே பரிவர்த்தனை செய்தே பல மணிநேரங்கள் வீணாகிறது. அந்த வீணாகும் நேரத்தை குறைத்தால் உங்களின் productivity எனப்படும் உற்பத்திதிறன்(நான் browsing செய்வதில் என்னத்த உற்பத்திதிறன் இருக்குன்றீங்களா?) அதிகரிக்கும். அதற்குதான் கணிணியில் பயன்படுத்தப்படும் எல்லா செயலிகளுமே(Applications) குறுக்குவிசைகளுடன்(shortcuts) வருகிறது. இந்த பதிகையில் நாம் உலாவியில் பயன்படுத்தப்படும் குறுக்குவிசைகளை பற்றி பார்ப்போம்.
இணையதளத்தில் இன்று Browser எனப்படும் பல உலாவிகள் பயன்படுத்தப்படுகின்றன, ஒவ்வொருவரும் தனக்குப்பிடித்தமான ஒரு உலாவியைப் பயன்படுத்துகிறார். பலவிதமான உலாவிகள் இருந்தாலும் சில உலாவிகள் மட்டுமே பரவலாக பயன்படுத்தப்படுகின்றன உதாரணமாக ஃபயர்பாக்ஸ், கூகிளின் குரோம், குரோமியம், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஒபேரா, சபாரி ஆகிய உலாவிகளை சொல்லலாம். இது தவிர எபிக்(இது பெங்களூரில் உள்ள ஒரு இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது) போன்ற பல சிறிய அதிகம் பிரபலமாகாத உலாவிகளும் உள்ளன. பல விதமான உலாவிகள் இருந்தாலும் பெரும்பாலான குறுக்குவிசைகள் எல்லாவற்றிலும் பொதுவாகவே இருக்கிறது. நல்ல வேளையாக ஆப்பிளோ, மைக்ரோ சாஃப்டோ, சாம்சங்கோ குறுக்குவிசைக்கு பேடண்ட்(patent) எனப்படும் உரிமத்தை வாங்கிவைக்கவில்லை ;-). உங்களுக்கு ஆப்பிளுக்கும், மைக்ரோசாஃப்ட்டுக்கும் இடையே வழக்கான trash, recyclebin பிரச்சனை தெரியும்தானே?. சரி அந்த கதைய முடிஞ்சா இன்னொரு இடுகைல பாத்துக்கலாம், இப்ப shortcut-க்கு வருவோம். கீழ்காணும் குறுக்குவிசைகளில் ஒன்றிரண்டைத்தவிர மற்ற எல்லாமும் எல்லா உலாவிகளிலும் இயங்கும்.
1. Address bar எனப்படும் முகவரிப் பெட்டிக்குச் செல்ல Ctrl + l (அ) Alt + d
2. புதிய பக்கத்தை(tab-ஐத்) திறக்க Ctrl + t
3. புதிய சாளரத்தை (window-ஐத்) திறக்க Ctrl + n
4. தற்போது பார்த்துக்கொண்டிருக்கும்/பயன்படுத்திக்கொண்டிருக்கும் பக்கத்தை tab-ஐ மூட/நீக்க Ctrl + w
5. கடைசியாக மூடிய(மறதியிலோ [அ] தெரிந்தோ :)) tab-ஐத் மீண்டும் திறக்க Ctrl + shift + t
6. தற்போது பார்த்துக்கொண்டிருக்கும்/பயன்படுத்திக்கொண்டிருக்கும் பக்கத்தில் ஒரு வார்த்தையோ (அ) வாக்கியத்தையோ தேட Ctrl + f. பிறகு தேடவேண்டியதை உள்ளிட்டு enter-ஐத் தட்டவும்.
7. history எனப்படும் முன்னதாக(நேற்றோ, போன வாரமோ, போன மாதமோ) பார்த்த பக்கங்களை அறிந்துகொள்ள Ctrl + h
8. நீங்கள் browsing செய்தபோது சேகரிக்கப்பட்ட எல்லா தகவல்களையும் அழிக்க Ctrl + shift + delete
9. உங்கள் உலாவியில் திறந்திருக்கும் tabகளில் முதலாவதிற்கு செல்ல Ctrl + 1, 2-வதிற்கு செல்ல Ctrl + 2, ... கடைசி tab-க்கு செல்ல Ctrl + 9. (இது குரோம், குரோமியம் தவிர்த்த ஒரு சில உலாவிகளில் வேலைசெய்யாது).
10. பார்த்துக்கொண்டிருக்கும் tab-க்கு அடுத்த tab-க்கு செல்ல Ctrl + tab key அ Ctrl + page down button.
11. பார்த்துக்கொண்டிருக்கும் tab-க்கு முந்தைய tab-க்கு செல்ல Ctrl + shift + tab key அ Ctrl + page up button.
12. பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை zoom in செய்ய, பெரிதாக்க Ctrl + + (அ) Ctrl + mouse scroll up
13. பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை zoom out செய்ய, சிரிதாக்க Ctrl + - (அ) Ctrl + mouse scroll down
14. பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை zoom in/out பெரதோ/சிறிதோ செய்தபின், மீண்டும் சரியான அளவுக்கு கொண்டுவர Ctrl + 0
15. பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை அச்சிட Ctrl + p
16. உலாவியை மூட(close) Alt + f4 <--function key
முதலில் குறுக்குவிசைகளை பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். பிறகு சில நாளில் பழக்கத்தில் வந்துவிடும். மவுசு(அட கம்ப்யூட்டர்ல இருக்குற mouseங்க) இல்லாமல் இயக்கிட வாழ்த்துகள் ;)
குறிப்பு:
இந்த குறுக்குவிசைகளை தவிர்த்து உங்களுக்கு வேறு எதேனும் புதியதாக தெரியுமென்றால் அதை மறக்காமல் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்(அம்மா சொல்லித்தந்த்தில்லையா ஷேரிங்...). எனக்கும் இந்த பதிவை படிக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.