Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, September 25, 2014

மினி கதைகள்-1 - அன்பு-மதி

"நெடு நாட்களாகத் தேடப்பட்டு வந்த தொடர் கொலைகாரன் மதியழகனை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்"

"இந்த உலகம் அதிபுத்திசாலிங்களுக்கு மட்டும்தான் சொந்தமாமே, அறிவாளிங்க மட்டுதான் வாழனும் அதனால மத்தவங்களலாம் இவரு கொன்னுடுவாராமே... இவனை கொண்டுபோய் அந்தப் பய கூடவே போடுங்க... எக்கேடும் கெட்டு ஒழியட்டும்"  அடித்தொண்டையில் கத்தினார் இன்ஸ்பெக்டர் கரிகாலன்.

"க்றீச்" என்ற சத்தத்தோடு கதவு மூடி பூட்டப்பட்டது.

ஹூம்... அறிவையும் மதிநுட்பத்தையும் பத்தி இவங்களுக்கு எங்க புரியப்போகுது..?  அடிப்படை அறிவு கூட இல்லாதவங்கலாம் எதுக்கு உயிரோட இருக்கனும் பூமிக்கு பாரமா? அவங்கலாள யாருக்கு என்ன லாபம்?  இந்த மாதிரி அறிவில்லாம அன்பு, பாசம், கருணைனு பேசறவங்களால தான் நம்ம நாடு இன்னமும் பின் தங்கி இருக்கு... அதான் கொன்னேன் இது தப்பா? எதிரிலிருந்தவனிடம் பேசினான் மதியழகன்.

எதிரிலிருந்தவன் சினேகமாய் சிரித்தான்.

இந்த இடத்துல இருந்து தப்பிக்க எனக்கு எவ்வளோ காலம் ஆயிடப்போகுது?  அன்பாம் பாசமாம் கருணையாம்... ஆஆ.... ஹ்க்.. ஹ்க்...

மதியழகன் தொண்டைக்குழிக்கு மேலே சிறு பிளவுடன் இரத்தம் தெறித்துக்கொண்டிருந்தான்...

'உன்னமாதிரி அன்பே இல்லாதவனுக்கு இந்த உலகத்துல இடம் கிடையாதுடா...' கத்தியை துடைத்துக்கொண்டிருந்தான் எதிரிலிருந்த தொடர் கொலைகாரன் அன்பழகன்.

Monday, December 16, 2013

மினி கதைகள்-2 - பேங்க் லோன்

"டேய், பிரகாஷ் எப்படிடா இருக்க...? தொப்பலாம் போட்டுடிச்சி... ஹூம் கல்யாணம் பண்ணிட்டியாடா?" ஏழு வருட இடைவெளிக்குப் பின்னால் நண்பனைக் கண்ட சந்தோஷத்தில் கண்ணடித்து கேட்டான் நாகராஜன்.

"மாப்ள.. நல்லாருக்கேன் டா..., நீ எப்டி இருக்க?" என்றான் பிரகாஷ் கையிலருந்த பைலை பின்னால் மறைத்தபடியே..

"அப்றம், பேங்குக்கு வந்திருக்க..."

"ஆமான்டா ஒரு லோன் விஷயமா வந்தேன்.."

"நான் தான்.." என்ற நாகராஜன் முடிப்பதற்குள்..

பிரகாஷ் தொடர்ந்து.. " என்னடா பேங்கு இது... ஒரு A.C இல்ல.. எப்டி sweat ஆகுது பாரு..  சென்னைல எங்க ஆபிஸ்ல பாத்ரூம் கூட A.C"

"விடுடா இது என்ன சென்னையா? இல்ல உன் ஆபீஸா? நம்மூருதான... ஆமா நீ ஏன் இப்டி feel-பண்ற... நாமலாம் ஸ்கூல் கிரவுண்டல லீவுநாள்ல மதியமானா 12, 1 மணினு கூட பாக்காம வேகாத வெயில்ல.." என்று நாகராஜன் முடிப்பதற்குள்,

"டேய் நாகு, உன் கலர் பாரு என் கலர் பாரு,  இப்ப நான் போட்ருக்க சட்ட arrow brand.. 1600 Rupees தெரியுமா? இதுல (இவன் வேற.. )இந்த sweating வேற.."

நாகராஜன், "சரி விடு அது என்ன கைல? Form 16.. Gross Total Inco.."

"டேய் அதுலாம் உனக்கு புரியாது... நீ என்ன பணம் எடுக்க வந்தியா.. ? உனக்கு எப்படியும் ஏடிஎம் கார்டு இருக்காது... செல்லான் ஃபில் பண்ணிட்டு போய் க்யூல நில்லு...
ஆமா, ஸ்கூல் அப்புறம் நான் B.E முடிச்சிட்டு சென்னைல Software Engineer ஆயிட்டேன்.. நீ என்ன BA தமிழா? B.Sc பாட்டனியா? இல்ல +2 வோட நின்டியா?" நக்கலாக கேட்டான் பிரகாஷ்.

சிரித்துக்கொண்ட நாகராஜன், "ஏன்டா Enginnering படிச்சு Software Engineer ஆனவன் மட்டுந்தான் மனுசனா? இல்ல BA தமிழ், பாட்டனிலாம் படிப்பே இல்லேங்கறியா...?"

"அப்டி இல்லடா... நான் என்ன சொல்ல.." என்று பிரகாஷ் முடிப்பற்குள்.

"சரிடா வீட்ல எல்லாரையும் விசாரிச்சதா சொல்லு, வரேன்" என்று சொல்லிவிட்டு நாகராஜன் பேங்குக்குள் நுழைந்தான்.

AC இல்லாத வங்கியையும், வியர்வையையும் சில நிமிடம் சபித்துவிட்டு, தன் Arrow brand சட்டையை சரிசெய்து கொண்டு பிரகாஷும் உள்ளே நுழைந்தான். காலியாக இருந்த "May I Help You " டெஸ்கில் சிறிது நேரத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து உட்கார்ந்தாள்.

"Excuse me, I am Prakash.  I want to meet Manager regarding Home Loan"

"Yes, Please.  ஆங்.. மேனேஜர் இப்ப தான் வந்தாரு, நீங்க மீட் பண்ணலாம் போங்க.... First right then stright" விரலில் அபிநயம் பிடித்தாள்.

"டொக் டொக்.. May I come in sir?"

"Yes, come in.." கதவு திறுந்து உள்ளே நுழைந்தான் பிரகாஷ்...

டேபிள் மேலிருந்த போர்டு
" நாகராஜன் M.Com.,
  மேலாளர்.  "  என்று வரவேற்றது.