Showing posts with label மடிக்கணினி. Show all posts
Showing posts with label மடிக்கணினி. Show all posts

Wednesday, November 9, 2011

பாஸ் லினக்சு நிறுவல் குறித்த தமிழக அரசின் அரசாணை.

தமிழக அரசின் மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தில் வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளில் பாஸ் லினக்சு நிறுவப்பட்ட பிறகு அதன் பரவல் அதிகரித்துள்ளது.  தற்போது பாஸ் லினக்சின் கிரீடத்தில் மற்றுமொரு இறகு சேர்ந்துள்ளது.  ஆம் தமிழக அரசு நவம்பர் 9 அன்று வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தமிழக அரசின் தகவல்தொழில்நுட்பதுறையில் பாஸ் லினக்சு நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. 

இது கட்டற்ற/திறந்த மூல மென்பொருள்(FOSS - Free or Open Source Software) ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய ஒரு செய்தியாகும்.  ஏற்கனவே இந்திய அரசு வெளியிட்ட ஒரு அரசாணையில் வன்பொருள் வழங்கும்/உற்ப்பத்தி செய்யும் நிறுவனங்கள் லினக்சு போன்ற கட்டற்ற/திறந்த மூல மென்பொருளுடன்(FOSS) ஒத்திசைவுடன் இருக்கவேண்டும் என கூறியுள்ளது.  இந்திய அரசுடன், தமிழக அரசும் கைகோர்த்து தற்போது கட்டற்ற/திறந்த மூல மென்பொருளின் பக்கம் திரும்பியுள்ளது கண்டிப்பாக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.