Showing posts with label முதியோர் இல்லம். Show all posts
Showing posts with label முதியோர் இல்லம். Show all posts

Wednesday, November 5, 2014

தண்டனைச் சிறை


Old man in Tiruvannamalai - India
Photo by Adam Jones
என்றோ செய்த தவறுக்கு
  இன்று தண்டனையாம் எங்களுக்கு
எங்கள் சிறைச்சாலை சற்றே மாறுபட்டது
  வேண்டியது கிடைக்கும்
நாள் விடிந்ததும் நாளேடு உண்டு
  வேளைக்கு சோறும் உண்டு
படுத்துறங்க மெத்தையுண்டு
  கண்டுமகிழ தொலைக்காட்சியும் உண்டு
ஆனாலும் அது தண்டனைச் சிறைதான்

ஆங்...
செய்த தவறுதான்
  என்ன என்கிறீர்களா?
30, 35 வருடங்களுக்கு முன்
  ஆண் இரண்டும், பெண் ஒன்றுமாக
3 பிள்ளைகள் பெற்றேன் ஐயா.