Showing posts with label wechat. Show all posts
Showing posts with label wechat. Show all posts

Thursday, January 23, 2014

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(12-01-14 முதல் 18-01-14 வரை)

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த 2014-ம் ஆண்டுக்கான நுகர்வோர் மின்னணு சாதன காட்சியில்(2014 CES - Consumer Electronics Show) 2014-ம் ஆண்டு மிக அதிகம் விரும்பப்படும்(hottest இதை எப்படி தமிழ்படுத்துவதென்று தெரியவில்லை..) தொழில்நுட்ப போக்குகளாக (Techonology Trends) பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன.. 1. அணிகணினி 2. இணையத்தோடு இணைந்த பொருட்கள்(Internet Of Things) 3. (நுண்ணறி, எச்டி) தொலைக்காட்சிகள் 4. (நுண்ணறி) வாகனங்கள் 5. நுண்ணறிபேசிகள்(Smart Phones) 6. ரோபாட்டிக்ஸ்(Robotics) 7. டிரோன்கள்(Drones) - விமானியில்லாத (சிறு) விமானங்கள் 8. முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் (3D printing) 9. நுண்ணறி வீடுகள் (Smart Homes) 10. நுண்ணுர்வு கணினியியல் (Intutive computing)

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 9 -ன் உருவாக்கத்தை இந்த ஆண்டில் ஆரம்பித்து, 2015 ஏப்ரல் வாக்கில் வெளியிடவுள்ளதாக அறியப்படுகிறது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது இரட்டை இயங்குதளங்களை உடைய லேட்டேபை $500 -க்கும் குறைந்த விலைக்கு சந்தையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

காதொலிப்பான்(ear phone) மற்றும் தலையோடு காதொலிப்பான் (Head phone - சரியான தமிழாக்கம் தானா?) தயாரிப்பு நிறுவனமான பீட்ஸ்(Beats) தனது இசை ஒடை (Music Streaming) சேவையை இந்த ஜனவரி 21-ல் தொடங்கவிருக்கிறது.  இந்தச் சேவைக்கு ஏதுவான ஆன்டிராய்டு, ஐஓஎஸ் செயலிகளுக்கும், உலாவிகளுக்கும் ஆதரவோடு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஃபேஸ்புக் நிறுவனம் நியுயார்க்கைச் சேர்ந்த ஒரு தொடக்க கால நிறுவனமான(Strart-up) பிரான்ச் என்கிற நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.  இந்நிறுவனம் பல்வேறு சமூகவலைதளங்களில் பேச்சுக்கான பலவிதமான கருவிகளை உருவாக்கியுள்ளது.

கோடாடி(GoDaddy), மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து சிறு வணிகர்களுக்கு ஆஃபிஸ் 365-ஐ தரவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

கூகுள் நிறுவனம் நுண்ணறி வெப்பநிலைநிறுத்தி(Smart Thermostat)
 மற்றும் புகை உணரி (Smoke Detector)
தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்-ஐ (Nest) $3.2 மில்லியன் கொடுத்து கையகப்படுத்தவுள்ளது.

இணைய வணிக/விற்பனை நிறுவனமான ஈபே(EBay) தனது கட்டணம் செலுத்தும் சேவையை(Payment service) புதிதாக சீரமைத்துள்ளது.  இதன்மூலம், பயனர்கள் தங்கள் கட்டணத்தை பேபால் (PayPal) தளத்திற்கு செல்லாமல் தாங்கள் இருக்கம் தளத்திலிருந்தே செலுத்தலாம்.

வோடஃபோன் இந்தியா செயலிகளை உருவாக்கி விற்பதற்கான தளம் ஒன்றினை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் பெறப்படும் செயலிகளுக்கான தொகை அலைபேசி கட்டண ரசீதுடன் சேர்ந்து வரும்.

வெரிசான்(Verizon) மற்றும் ஆரக்கிள்(Oracle) நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஆரக்கிள் தரவுதளம் மற்றும் ஆரக்கிள் ஃபியூசன் மிடில்வேர் இரண்டையும் வெரிசான் மேகக்கணிமை வாயிலாக தர முடிவு செய்துள்ளன.

ஃபேஸ்புக் நிறுவனம் வரும் மாதத்தில் படிப்பான் (facebook reader) ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது.

ஆப்பிள், கூகுள் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் பேச்சின் மூலம் தேடல் முறையை பிங் தேடுபொறியுடன் இவ்வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் இருந்து தரவுள்ளது.  மேலும், இவ்வசதியை அதன் அலைபேசிகளுக்கும் கொண்டுவரவுள்ளதாக அறியப்படுகிறது.




ரஷ்ய தேடுபொறியான யான்டெக்ஸ்(Yandex) (ரஷ்யாவில் கூகுளை விஞ்சி 60% தேடல் சந்தையை தன் வசம் வைத்துள்ளது, சீனாவிலும் இதே கதைதான் பெய்டு(Baidu) என்கிற சீன தேடுபொறிதான் அங்கும் ஆள்கிறது) ஃபேஸ்புக்கிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

கூகுள் கடைசியாக மேற்கொண்ட கையகப்படுத்தல் நடவடிக்கையோடு(நெஸ்ட் நிறுவனத்தை 3.2 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியுள்ளது) கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட கையகப்படுத்தலின் மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.  இது கூகுளின் முதல் 5 போட்டி நிறவனங்களும்(ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், அமேசான் யாஹூ) சேர்ந்து மேற்கொண்ட கையகப்படுத்தலைவிட மிக அதிகம் என புளும்பெர்க் நிறுவனம் (bloomberg) தெரிவித்துள்ளது.

கூகுள் தனது குரோம் உலாவியின் விண்டோஸ் பதிப்பை விண்டோஸ் 8 இயங்குதளத்திற்காக மேம்படுத்தியுள்ளது.

அலைபேசி செயலிகளின் பயன்பாடு 2013-ம் ஆண்டில் 115% அதிகரித்துள்ளதாக Flurry Analytics நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிவிட்டர் துணை நிறுவனர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன்(Biz Stone) கேள்வி-பதில் அடிப்படையில் அமைந்த ஒரு சமூக வலைதளம் ஒன்றை ஜெல்லி(Jelly)

என்கிற பெயரில் உருவாக்கியுள்ளார். ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்குப் பெற இங்கே சொடுக்கவும்


எச்பி நிறுவனம் 3G வசதி மற்றும் பேசும் வசதியுடன் கூடிய சிலேட்டு கணினிகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுள் நிறுவனம் இணைய பாதுகாப்பு தொடக்க நிறுவனமான(startup) இம்பீரியத்தை(Impermium) கையகப்படுத்தியுள்ளது

அலைபேசி செயலியான பாக்ஸ்(Box) தனது செயலியை ஐஓஎஸ் இயங்குதளத்தில் தரவிறக்கி பயன்படுத்துபவர்களுக்கு 50 ஜிபி மேக சேமிப்பகத்தை (cloud storage) இலவசமாக தருகிறது.
ஆன்ட்ராய்டு அலைபேசிகளுக்குப் பெற இங்கே சொடுக்கவும்,
ஐஓஎஸ் இயங்குதளத்திற்குப் பெற இங்கே சொடுக்கவும்

கூகுள் நிறுவனம் அலைபேசிகளில் செயல்படும் குரோம் உலாவிக்கு ஒரு புதிய மேம்பாட்டினை தரவுள்ளது.  இதன் மூலம் உலாவியைப் பயன்படுத்தும்போது ஏற்படும் தரவுப் பரிமாற்றம் 50% சதவீதம் அளவிற்கு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைபேசி பேச்சு செயலிகளில் ஒன்றான வீசாட் தற்போது அதன் இயங்குபரப்பிற்குள்ளாகவே விளையாடும் விளையாட்டுகள் சிலவற்றையும், இருப்பிடத்தை அறிந்த அதன்அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட சேவைகளையும் தரவுள்ளது(ஆஸ்க்மீ - Askme நிறுவனத்துடன் இணைந்து).  இதன்மூலம் வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளுக்கு ஒரு உறுதியான சவாலாக மாறவுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Tuesday, November 19, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(10-11-13 முதல் 16-11-13வரை)

ஸோலோ தனது Q9000 பேப்லேட்டை இந்திய ரூபாய் 14,999 -க்கு வெளியிடவுள்ளது.  இது 5.5 இன்ச் தொடுதிரை, 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் 2600 மில்லி ஆம்ப் மின்கலத்துடன் வரவுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் வளைந்த திரையுடன் கூடிய ஐபோனை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இளைய தலைமுறையினர் குறிப்பாக பதின்ம வயதினர் (அ) விடலைப் பருவத்தினர்(Teen age) பேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ்ஆப்(WhatsApp), வீசாட்(WeChat)  போன்ற அலைபேசி செயலிகளை அதிகம் பயன்படுத்துவாக அறியப்படுகிறது.

இந்திய அலைபேசி தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அடுத்த காலாண்டிலிருந்து, தனது அலைபேசி கட்டமைக்கும் தொழிற்சாலையை இந்தியாவுக்குள்ளேயே நிறுவி கட்டமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டில் நுண்ணறி அலைபேசிகளின் விற்பனை 3 மடங்காகும் என்று எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது யூடியூப் நிகழ்பட சேவைப் பயன்பாட்டை மக்களிடம் மேலும் பரவலாகச் செய்ய வெளியிட்ட இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட விளம்பரப்படம் பயனர்களிடம் பலத்த வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. 
யூடியூபில் அவ்விளம்பரப்படத்தின் காணொளி காட்சி



கூகுளின் பலூன் மூலம் வை-பை(Wi-Fi) இணையத் தொடர்பை தரும் திட்டத்தின் பலூன் பூமியை மூன்று முறை வலம் வரும் என்று கூறப்பட்டுள்ளது.  இதற்கு "திட்டம் லூன் (Project Loon)" என்று பெயரிட்ப்பட்டுள்ளது. 
செயல்பாட்டை விளக்கும் காணொளி காட்சி

வைபர்(viber) எனும் இணைய இணைப்பின் மூலம் தொலைபேச உதவும்(ஸ்கைப்(Skype) போலபிரிங்(Fring) போல)  அலைபேசி செயலி உலகளவில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுருந்தாலும், இந்தியாவில் இச்செயலி பிரபலமாகவில்லை.  இந்தியர்களை இச்செயலியை பரவலாகப் பயன்படுத்த வைக்கவேண்டும் என்பதே என் விருப்பம் என இந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி தெரிவித்துள்ளார்.

வீடியோகான் நிறுவனம் இந்திய ரூபாய் 8999 விலையில் ஒரு 3ஜி மற்றும் அழைப்பு வசதியுடன் கூடிய VT85C என்கிற பலகைக் கணினியை அறிமுகப்படுத்தவுள்ளது.    7 இன்ச் திரை, டூயல் கோர் கார்டெக்ஸ் ஏ9 வகை இயங்க்கியுடன் கூடிய இது ஆன்ட்ராய்டு 4.2.2 (ஜெல்லி பீன்) பதிப்பு இயங்குதளத்துடன் 2013 இறுதியில் வரவுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு