Wednesday, September 25, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(22-09-13 முதல் 28-09-13வரை)

தென்கொரிய அலைபேசி தயாரிப்பு நிறுவனமான எல்ஜி இந்தியச் சந்தையில் அதன் ஜி2 வகை நுண்ணறிபேசியை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடவுள்ளது.

சீன தொலைதொடர்பு மற்றும் அலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் புதியதாக 5,500 வேலைகளை ஐரோப்பாவில் உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த முதுகலை பொறியல் பட்டதாரி மாணவர் அமெரிக்க டாலர் $1,80,000 (இந்திய ரூபாயில் தோராயமாக 1கோடியே 10 லட்சம்) சம்பளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து பணியாணை பெற்றுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது (கிட்டத்தட்ட) தோல்வி தயாரிப்பான சர்ஃபேஸ்(Surface) குளிகைக்கணினியை மேம்பாடுகளுடன் சர்ஃபேஸ் 2, சர்ஃபேஸ் புரோ 2 என்ற பெயரில் மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த ஒரு நுண்ணறிபேசி நிறுவனம் நரேந்திரமோடியை கருப்பொருளாகக்(Theme) கொண்டு இரண்டு நுண்ணறிபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  ஸ்மார்ட்நமோ சஃபரான் ஒன்(Smar NaMo Saffaron One), ஸ்மார்நமோ சஃபரான் டூ(Smart NaMo Saffron two) என்று பெயரிடப்பட்டுள்ள இவ்விரு அலைபேசிகளும், மின்-வணிக(சந்தை) இணையதளமான ஸ்னாப்டீல்(SnapDeal)-ல் கிடைக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக்-ஐ இன்டெலின் இயக்கிகளைக்(Processors) கொண்டு மேம்படுத்தியுள்ளது.

ஆரக்கிள் நிறுவனம் 10 புதிய மேகக்கணிமை சார்ந்த சேவைகளைப் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

காணொளி விளையாட்டு உருவாக்க நிறுவனமான வால்வ், ஸ்டீம்ஓஎஸ்(SteamOS) என்கிற பெயரில் பிளே ஸ்டேஷன்(Play Station), எக்ஸ்பாக்ஸ்(Xbox) போன்று ஒரு விளையாட்டு மென்பொருளை உருவாக்கியுள்ளது.  முக்கியமான விஷயம் இதன் மூலநிரலை கட்டற்ற/திறந்த உரிமத்தில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளது.

சாம்சங், மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களைப் போல எச்டிசி நிறுவனமும் குறைந்த விலை நுண்ணறிபேசிகளை (இந்திய ரூபாய் 10,000 அல்லது அதை விடக் குறைவாக) உருவாக்க திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து 5ஜி(5G) தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஆராய்சிகளை மேற்கொண்டுவரும் சீனா, 2020 வாக்கில் தன்னுடைய 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்துபார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி(CEO) ஆலன் முல்லே மென்பொருள் பெருநிறுவனமான மைக்ரோசாஃப்டின் அடுத்த தலைமைச் செயலதிகாரிப் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.

நுண்ணறி அலைபேசி நிறுவனமான பிளாக்பெரி தனது இரண்டாவது காலாண்டில் சுமார் $965 மில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

No comments:

Post a Comment