Monday, December 30, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(08-12-13 முதல் 14-12-13வரை)

எல்ஜி நிறுவனம் தனது வளைவான திரையுடைய நுண்ணறிபேசிகளை இந்தியாவில் டிசம்பரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஃபிளிப் கார்ட் நிறுவனம் செயல்படுத்திவரும் அதேநாளில் விநியோகம் (Same day delivery) அதற்கு நற்பெயரை ஈட்டித்தந்ததைத் தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனமும் இதைப் பின்தொடரந்து அதேநாள் விநியோக முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.

யாகூ நிறுவனம் நிகழ்பட ஓடை சேவையை (Video Streaming) வழங்கும் புதிதாய் தொடங்கிய நிறுவனமான குயிக்ஐஓ(QuikIO) நிறுவனத்தினை கையகப்படுத்தியுள்ளது.

இன்டெர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things (IoT) பற்றிய விளக்கத்திற்கு ) 2020 வாக்கில் 30 மடங்கு அதிகரிக்கும் என்று கார்டனர் நிறுவனம் கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராம் தனிப்பட்ட முறையில் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நுண்ணறிபேசிகளில் சக்கைப் போடு போட்ட விளையாட்டு செயலியான ஆங்கிரிபேர்ட்ஸ் விளையாட்டை உருவாக்கிய ரோவியோ நிறுவனம் தற்போது ஆங்கிரிபேர்ட்ஸ் கோ (angrybirds go)என்கிற பெயரில் கார் ரேஸ் விளையாட்டுச் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ட்ருகாலர் தனது பயனர்களை அதிகரிக்கவும் அவர்களின் ஆதரவைப்பெறும் வகையில் தற்போது டுவிட்டருடன் இணைந்து செயல்படவுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது வழங்கிக் கணினிகளுக்கான(Server computer) இயக்கிகளை (Processor) தானே தயாரிக்கவுள்ளதாக செய்திகள் கசிகின்றன.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


No comments:

Post a Comment