Thursday, January 23, 2014

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(19-01-14 முதல் 25-01-14 வரை)

அலைபேசி தயாரிப்பு நிறுவனமான லாவா(lava) 2015 மார்ச் வாக்கில் தங்கள் நிறுவனத்தினை பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்ற வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஒரு நுண்ணறி contact lens -ஐ உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இது, மனிதனின் இரத்த குளுக்கோஸ் அளவை தானாகவே குறிப்பிட்ட இடைவெளிகளில் பதிவுசெய்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.  இது மட்டும் சாத்தியப்பட்டால் சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

2014-ம் ஆண்டில் உலகளவில் நுண்ணறி அலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.75 பில்லியன் அளவிற்கு அதிகரிக்கும் என்று eMarketer எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2013-ம் ஆண்டு செய்யப்பட்ட காப்புரிமைகளில் 6809 காப்புரிமைகளுடன் ஐபிஎம் நிறுவனம் தொடர்ந்து முன்னிநிலையில் உள்ளது.  இதைத் தொடர்ந்து சாம்சங், கேனான் போன்ற நிறுவனங்கள் உள்ளன.  கூகுள் நிறுவனம் 11வது இடத்தில் உள்ளது.

சீனா தனது சொந்தத் தயாரிப்பாக ஒரு புதிய அலைபேசி இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது. மேலும் இது ஆன்ட்ராய்டு, ஐபோன் போன்றவற்றைவிட அதிக பாதுக்காப்பானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகப் பிரபலமான அலைபேசி/உலாவி விளையாட்டான கேண்டி கிரஷ் விளையாட்டின் உருவாக்குனர்கள் கேண்டி என்கிற வார்த்தைக்கு காப்புரிமைப் பெற்றுவிட்டனர்.

அலைபேசி பேச்சு செயலியான வாட்ஸ்ஆப்(Whatsapp) தனது மாதாந்திர இயக்கத்திலுள்ள பயனர்களின் எண்ணிக்கை 450 மில்லியன் என்று அறிவித்துள்ளது.  மேலும், இதில் 35 மில்லியன் இந்திய பயனர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்ததக்கது.

புதிதாக நடத்தப்பட்ட நுகர்வோர் அனுபவத்தின் அடிப்படையிலான கணக்கெடுப்பின்(Consumer Experience Survey) அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாப்ட், சாம்சங், சோனி ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பெரிய நிறுவனங்கள், இணையதள பாதுகாப்பு(CyberSecurity) வல்லுனர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாமல் தடுமாறிவருவதாக சிஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

2013-ம் ஆண்டின் மிக மோசமான 25 கடவுச்சொற்களாக mashable.com  அறிவித்துள்ள (Password) (மோசமாக என்றால் மற்றவர்கள் கடவுச்சொல்லை அறிந்துகொள்ளும் வகையில் அமைந்த) அறியப்பட்டுள்ளவற்றில் முதல் 10 இடங்களைப்பெற்றுள்ள கடவுச்சொற்கள்
1. 123456
2. password
3. 12345678
4. qwerty
5. abc123
6. 123456789
7. 111111
8. 1234567
9. iloveyou
10. adobe123

2 முதல் 10 வயதுள்ள குழந்தைகள் பயன்படுத்தும் வண்ணம் எடி(Eddy) என்கிற பெயரில் ஆன்ட்ராய்டு 4.2 உடன் கூடிய ஒரு பலகைக் கணினியை மெடிஸ்(Metis) என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது பட்ஜெட் நுண்ணறி அலைபசியான மோட்டோ-ஜியை (Moto-G) வரும் பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.  விலை நிலவரம் சரியாக தெரியாவிட்டாலும் 11,000 ரூபாய் அளவில் இருக்கும் என நம்பப்படுகிறது.  இது ஆன்ட்ராய்டு கிட்கேட் பதிப்புடன் வருவுள்ளது.

2013-ம் ஆண்டு அலைபேசிகளை குறிவைத்து உருவாக்கப்பட்ட மால்வேர்களில் 99% ஆன்ட்ராய்டு அலைபேசிகளையே கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சிஸ்கோவின் அறிக்கை தெரிவிக்கிறது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

No comments:

Post a Comment