Showing posts with label ஆன்ட்ராய்டு. Show all posts
Showing posts with label ஆன்ட்ராய்டு. Show all posts

Monday, April 1, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(24-03-13 முதல் 30-03-13வரை)

  • டிசிஎஸ் மற்றும் கேப் ஜெமினி இரண்டு நிறுவனங்களும் நார்வே போஸ்ட்டிடமிருந்து(Norway Post) இந்திய ரூபாய் 233 கோடிக்கான திட்டத்தை(project) பெற்றுள்ளன.
  • ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ்க்கு போட்டியாக விரைவில் பல புதிய மொபைல் இயங்குதளங்கள்(Mobile OS) வரவுள்ளன.  ஒன்று நாம் எல்லோரும் முன்பே அறிந்த(?) பயர்பாக்சு மொபைல் ஒஎஸ், லின்க்சை அடிப்படையாகக் கொண்டு உபுண்டு(ubuntu) தயாரித்த நிறுவனமான கனோனிக்கல் உபுண்டு மொபைல் ஒஎஸ்-ஐ வருட இறுதியில் வழங்கவுள்ளது.  இதை தவிர்த்து லினக்சை அடிப்படையாக வைத்து டைசன்(Tizen), செயில்பிஷ்(Sailfish) போன்று பல நகர்பேசி இயங்குதளங்கள் வரவுள்ளன. 
  • இந்தியாவில் கூகுள் நெக்சஸ்(Google Nexus) விற்பனைக்கு வருகிறது(ரூ. 15999), கூகுளின் பிளே ஸ்டோரிலிருந்து வாங்கலாம்.
  • 'குறைந்த விலை ஆகாஷ் டேப்ளட்(Aakash Tablet) திட்டம் நிறுத்தப்படலாம்' வதந்தி என மனிதவளத்துறை அமைச்சர் திரு பள்ளம் ராஜூ மறுப்பு
  • எச்பி(HP) நிறுவனம் கண்ணாடி அணியாமல் காணும் வகையிலான நகர்பேசி முப்பரிமாணத்(3D) (காட்சித்)திரையை உருவாக்கியுள்ளது.
  • ஜக்ஸ்டர் பன்னாட்டு நிறுவனம்(Jaxtr Inc.,) ஒரு பன்னாட்டு சிம் கார்டை(Global SIM card) உருவாக்கியுள்ளது.  இதன் மூலம் எந்த நாட்டிலிருந்தும், எந்த நாட்டிற்கும் தொலைபேசலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம், இணைய இணைப்பையும் பெறலாம்.  எல்லா பன்னாடு விமானநிலையங்களிலும் இந்த சிம் கார்டை வாங்கலாம் அல்லது இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.    
    • குறிப்பு: இணையத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய ஹாட்மெயில்(Hotmail) உருவாக்குனரான இந்தியர் சபீர்பாட்டியா, யோகேஷ் படேலுடன் தற்போது ஜக்ஸ்டர் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
  • லினக்சு இயங்குதள பணி(மேடை)சூழல்களில்(Desktop Environment) ஒன்றான கேடிஇ(KDE) அதிர்ஷ்டவசமாக ஒரு மிகப்பெரிய நாசத்திலிருந்து தப்பித்துள்ளது.  கேடிஇ அதன் மூலநிரல் களஞ்சியத்தில(source code repository) ஏற்பட்ட ஒரு சிறு பிழையின் காரணமாக அதன் ஒட்டுமொத்த மூலநிரல்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,  அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பித்தது.
  • சில நாட்களுக்கு முன்பு கூகுள் தனது இந்தியப்பகுதியின் கூகுள் மேப்ஸை மேம்படுத்தும் விதமாக, கூகுள் பயனர்களை பங்களிக்கக்கோரி ஒரு காணொளிப்படத்தின் மூலம் பரப்புரை நிகழ்த்தியது(Google Mapathon 2013).
    காணொளியைக் காண இங்கே ->
    இதனால் இந்தியாவின் ஒவ்வொரு சதுர மீட்டரைப்பற்றிய முழுத்தகவல்களும் விபரமும் கூகுளின் அமெரிக்க தரவுதளத்திற்கு செல்லும், இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்திற்கு இந்திய அரசின் அனுமதி பெறாமல் எப்படி பரப்பரை நிகழ்த்தினார்கள் என பிஜேபி(BJP) எம்பி(MP) தருண்விஜய் கேட்டுள்ளார்.

  • ரெட்பஸ்(Redbus) நிறுவனர் Phanindra Sama உள்ளிட்ட பெங்களூரைச் சேர்ந்த 7 பேர் MIT புதுமைபடைப்போராக தேர்ந்தெடுப்பு.
  • கூகிளின் கூகுள் கிளாசுக்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து தனிமனித அந்தரங்கத்திற்க்கு ஊறு விளைவிக்கும் என்று  தடை செய்யக்கோரி எதிர்ப்பு வலுக்கிறது.
  • கூகுளுக்கும், நோக்கியாவுக்கும் இடையே காணொளி encoding-க்கான VM8 தொழில்நுட்பத்திற்கான பிரச்சனை வலுக்கிறது.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க ->
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->  இங்கே சொடுக்கவும்



Monday, August 6, 2012

ஆன்ட்ராய்டு(Android) போன்ற ஸ்மார்ட்ஃபோன்களில் தமிழ்(அல்லது எந்த பிராந்திய மொழி) வலைத்தளங்களை, வலைபூக்களை(blogspots) காண்பது எப்படி?



1. Google market/play வில் இருந்து ஓபரா மினி(Opera mini) மொபைல் உலாவியை நிறுவுக.
2. இப்போது உங்கள் மொபைலில் உள்ள ஓபரா மினி உலாவியை தொடங்குக
3. ஓபரா மினி உலாவியின் முகவரி பட்டியில்(Address bar) "opera:config" [மேற்கோள் இல்லாமல்] என டைப் செய்து enter தட்டவும்
4. இப்போது வரும் பக்கத்தின் அடிவரை scroll செய்தால் "use bitmap font for complex scripts" என்று ஒரு தெரிவு(option) வரும். முடக்கப்படிருக்கும்(No) அந்த தெரிவை செயல்படுத்தவும்(Yes).

அவ்வளவுதான்​​... :) இனி நீங்கள் எந்த தமிழ் இணையதளத்தைப் படிக்க வேண்டுமோ அதை திறந்து பாருங்கள் எழுத்துருக்கள் தெளிவாக இருக்கும்.

குறிப்பு:
1. நினைவிருக்கட்டும் இந்த முறையில் நீங்கள் தமிழ்(அல்லது வேறு எந்த மொழி) வலைபக்கங்களை பார்க்க/படிக்க மட்டுமே முடியும், எழுத முடியாது. ஆனால் இதற்க்காக நீங்கள் எந்த எழுத்துருக்களையும் உங்கள் மொபைல்போனில் நிறுவ தேவை இல்லை.
2. உண்மையில் இந்த முறையில் உலாவி ஒரு முழு வலைப்பக்கத்தையும் ஒரு bitmap பிம்பமாகவே காட்டுகிறது. எனவே, இந்த முறையில் (தமிழ்)மொழி ஒரு பொருட்டள்ள அனைத்து மொழி வலைப்பக்கங்களுமே சரியாக வரும்.