கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலை படித்தேன். அதன் பிறகு அவரின் கோபல்ல கிராமம், அந்தமான் நாயக்கர் (இந்த 3ம் தொடர் நாவல்கள்), அவருடைய எல்லா சிறுகதைகளையும் ஒரே தொகுப்பாக கொண்டுவந்த 'கி. ராஜநாராயணன் கதைகள்' ஆகியவற்றையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிவு இந்த நூல்களை படித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளின் தொகுப்பு.
கி.ரா-வின் அற்புதமான எளிய வட்டார வழக்கு மொழியில் அமைந்த எழுத்து நடை, நாவல் முழுவதும் பல குட்டி, குறுங்கதைகளை சுவாரஸ்யமாக சொல்லும் பாங்கு எல்லாமே அற்புதம். கிராமத்து வாழ்க்கை வாழ்ந்த பலருக்கும் அவர்களின் பழைய நினைவுகளை கண்முன் கொண்டுவரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நிறைய கதைகள் என்னை என்னுடைய பால்யத்துக்கு, எங்கள் கிராமத்திற்கு அப்படியே அலேக்காக தூக்கிப்போய்விட்டன. பல கதைகளும், கதை மாந்தரும், நிகழ்வுகளும் நான் சந்தித்த நபரகளையும், நானோ, எனை நண்பர்களோ சந்தித்த நிகழ்வுகளையும், நினைவுபடுத்தும். சில சாதாரண நிகழ்வுகள் கூட கி.ரா-வின் கைவண்ணத்தில் அற்புதமான கதையாகிவிடுகிறது. நம் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மிகச்சிறப்பான கதைசொல்லிகளில் கி.ரா மிக மிக
முக்கியமானவர்.
வரும் தலைமுறையினருக்கு பல விஷயங்கள், அனுபவங்கள், பொருட்கள்(உதாரணமாக முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், முறம் எல்லாம் இருக்கும் இப்பொழுது கிராமங்களில் கூட இல்லை :(... மிக்ஸி, கிரைண்டர் தான் இருக்கிறது), அவற்றின் பெயர்கள், சொற்கள், வழக்குமொழிகள், (கிராமத்து) நடைமுறைகள், வயதில் மூத்தவர்களினை அறிவு, அனுபவ ஞானம் கிடைக்க வழியே இல்லை என்ற நிலையில் நாம்
இருக்கிறொம். அதையும் மீறி நமக்கு அடுத்த தலைமுறையிரும் நம் அனுபவங்களை அவர்களாகவே பெறமுடியவிட்டாலும், குறைந்தபடசம் படித்து அறியவாவது ஒரு வாய்ப்பை கொடுக்கவேண்டும். அதற்கு எழுதும் ஆசையம், வாயப்பும் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை எழுத வேண்டும். சூட்சுமம் என்னவென்றால் அனுபவங்களை படிப்பவருக்கு பிடிக்கும் வண்ணம் கொடுக்கவேண்டும். அதற்கு அனுபவத்தை அப்படியே
கொடுக்ககூடாது, கற்பனையுடன் குழைத்து கொடுக்க வேண்டும். அதற்கு நாவலும், கதையும்தான் சிறந்த வழி அதாவது மருந்தை தேனில் குழைத்து கொடுப்பதுபோல, அதில் கி.ரா கில்லாடி. நாவல், கதை எதுவானாலும் அதில் அவரின் அனுபவங்கள் ஆங்காங்கே தேனில் குழைத்ததுபோல சுவையாய் இருக்கும்.
கி.ரா-வை படித்ததில் இருந்து எனக்கும் கூட நான் அனுபவித்த, சந்தித்த எனக்கு எற்பட்ட அனுபவங்களை ஒரு கதையாகவோ, கட்டுரையாகவோ, படைப்பாக்க வேண்டும் என்கிற ஆசையாய் இருக்கிறது, நானும் எழுத ஆரம்பிப்பேன், எழுதுவேன் என நம்புகிறேன். நான் விருத்தாசலத்தில் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரியின் ஆண்டுமலருக்கு ஒரு கதை எழுதி அனுப்பினேன். அது ஆண்டிமலரில் பிரசுரமாகியிருந்ததாக நண்பன் மூலமே அறிந்தேன். அதுதான் எனது
பிரசுரமான முதல் படைப்பு, ஆனால் அப்போது நான் முதுநிலை படிப்பிற்காக காரைக்குடிக்கு சென்றுவிட்டதால் அந்த ஆண்டுமலர் எனக்கு கிடைக்கவில்லை :(. கதையின் தலைப்பு ஞாபகமில்லை, ஆனால் கதை, கல்லூரியில் படித்துவிட்டு வேலைதேடி அலையும் ஒரு இளைஞன் கடைசியில் மனம்மாறி தன் தந்தையுடன் விவசாயத்திற்க
திரும்புவதுதாக முடியும். எழுதும் ஆசையுள்ள அனைவரும் எவ்வித தயக்கமும்மின்றி உடனே ஆரம்பியுங்கள், வலைப்பூவில் போட முடியாவிட்டால் கூட குறைந்த பட்சம் ஒரு காகிதத்திலாவது எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு விஷயம் தெரியுமா..? கி.ரா பள்ளிப்படிப்பை கூட முடிக்கவில்லை[கி.ரா தன்னைப்பற்றி குறிப்பிடும்போது 'நான்
மழைக்குதான் பள்ளிக்கூடம் ஒதுங்கினினேன்; ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டேன்' என்பார் ], தன்னுடைய 40 வயதிற்குமேல் தான் எழுத ஆரம்பித்தார். ஆகவே எழுத ஆரம்பிக்க ஒருவருக்கு படிப்போ, பதவியோ, வயதோ ஒரு தடையில்லை ஆர்வமும் கற்பனையும்தான் தேவை. எழுதுங்கள் உங்கள் அனுபவங்களை, அதை பகிர்ந்துகொள்ளுங்கள் உலகுடன் வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment