Monday, April 29, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(21-04-13 முதல் 27-04-13வரை)

கூகுளின் street view சேவை தற்போது மேலும் 50 உலக நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இல்லியனாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய லித்தியம்-அயன் பேட்டரி தொழில்நுட்பம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.  இத்தொழில்நுட்படத்தின் மூலம் அதிக மின்திறனை குறைந்த அளவுடைய மின்கலத்தில் சேமிக்க முடியும் என்றும், இது மிக விரைவாக மின்னேற்றம்(charge) ஆகிவிடுவதோடு, நீண்ட நேரத்திற்கு அதைத் தேக்கி வைத்திருக்கும் திறனுடையதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமேசான்.காம் இந்த வருட கடைசியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் TV-க்குப் போட்டியாக ஒரு செட்-டாப் பாக்சை அறிமுகப்படுத்தவுள்ளது.  இது இணைய்யிதிலிருந்து நிகழ்படம்/கணொளியை ஓடை(Streaming) தொழில்நுட்ப முறையில் காட்டும்.

ஆப்பிள் நிறுவனம் அதன் வருடாந்திர் உலகலாவிய உருவாக்குனர்(Developers) கலந்தாய்வு/மாநாட்டை ஜூன் மாதத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

பார்தி ஏர்டெலும், மைக்ரோசாஃப்டும் கூட்டாக இணைந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்பாக்ஸ்(Xbox) விளையாட்டு சாதனம் மற்றும் ஏர்டெல்லின் அதிவேக இணைய இணைப்புக்கான சாதனத்தை வாக்குவதில் சலுகை அறிவித்துள்ளது.  இதன்முலம் வாடிக்கையாளர்கள் சுமார் இந்திய ரூபாய் 15000 வரை மிச்சப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்திய மென்பொருள் நிறுவனமான டெக் மகிந்திரா(Tech Mahindra) ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த டைப் அப்ரூவல் லேப்(Type Approval Lab) எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மொபைல்களில் சாம்சங் நிறுவனம் நோக்கியாவைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்துள்ளதாக ஜிஎஃப்கே-நீல்சன்(Gfk-Nielsen) கருத்துக்கணிப்பு/மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டெல் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் குறைந்த விலை மடிக்கணினிகளை உருவாக்கி வருவதாகவும் இவற்றின் விலை சுமார் $200-ஆக இருக்கும்(இந்திய ரூபாயில் சுமார் 10,800) என்றும் இருக்கும் என்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ பால் ஒடெல்லினி(Paul Otellini) தெரிவித்துள்ளார்.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S4 தயாரிப்பு விற்பனைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பற்றாக்குறையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்குப் பிறகு அதிக அளவில் மொபைல் போன்களை உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ஹூவாய்(Huawei) தன்னுடைய வணிக அடையாளத்தின்(Brand Image) பரவலை அதிகரிக்கும் பொருட்டு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட உள்ளதாகத் தெரிகிறது.

யுனிநார் நிறுவனம் தனது சிம் கார்டுகள், ரீசார்ஜ் வவுச்சர்களை ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர்கள், பால் பாக்கேட், செய்தித்தாள் போடுவோர் மூலமாக விற்பனை செய்யும் ஒரு புதிய யோசனை வைத்திருப்பதாகக் கூறியுள்ளது.

சாம்சங் தனது கேலக்ஸி S4 நுண்ணறிபேசியை உற்பத்தி செய்யும் பகுதியைத் இந்தியாவிற்குள் அமைக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட் தனது "Blue screen of death" பிரச்சனையை நிவர்த்தி செய்யும் நிரல் ஒட்டினை(Source code patch) மீண்டும் வெளியிட்டுள்ளது. 

ஜாவா நிரல்மொழியின் 8வது பதிப்பு வெளிவருவது மீண்டும் தள்ளிப்போடப் பட்டுள்ளது.  தற்போதைக்கு இப்புதியப் பதிப்பு 2014-ம் ஆண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->

No comments:

Post a Comment