Wednesday, September 4, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(25-08-13 முதல் 31-08-13வரை)


மனித கண்ணின் ரெட்டினாவைப்போல் அதிவேகமாக செயல்படும் ஒரு கேமராவினை சுவிஸ் நாட்டைச்சேர்ந்த இனிலேப்ஸ்(iniLabs) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.  இது டைனமிக் விஷன் சென்சார்(Dynamic Vision Sensor- DVS) எனும் தொழில்நுட்பத்தால் இயங்குகிறது.

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட நுண்ணறிபேசிகளைவிட மிகப்பெரியதும், விலை அதிகமானதுமான ஒரு புதிய நுண்ணிறிபேசியை வெளியிட்டுள்ளது.  கேன்வாஸ் டூடுல் 2(Canvas Doodle 2) என்று பெயரிடப்பட்டுள்ள இது 5.7 இன்ச் திரையுடனும், 1.2 GHz குவாடு-கோர் புராசசருடனும், 1GB RAM நினைவகத்துடனும், 12 GB உள்ளார்ந்த நினைவகத்துடனும் வருகிறது.  விலை சுமாராக 20,000.

இந்தியாவின் ஸ்பைஸ் நிறுவனம்  பின்னாக்கிள் எஃப்எஃச்டி(Pinnacle FHD) என்ற பெயரில் மலிவுவிலை முழு எஃச்டி(HD) நுண்ணிறிபேசி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  விலை சுமாராக 16,500.

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய துணைத்தலைவராக திரு என். ஆர். நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தன்னுடைய நிதி மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இன்போசிஸ் நிறுவனம் அயல்நாட்டில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கூகுள் நிறுவனம் ஓட்டுனர் இல்லாமல் ரோபோக்களின் உதவியுடன் இயங்கும் வாகனங்களை பரிசோதனை அளவில் தயாரித்து, சோதனை மற்றும் வெள்ளோட்டம் விட்டது நாமறிந்ததே.  இப்போது இத்தொழில்நுட்பத்துடன் கூடிய பயணியர் டாக்சியை கூகுள் அறிமுகப்படுத்துவுள்ளதாகத் தெரிகிறது.

மலிவான ஆனால் தரமான நுண்ணிறபேசிகளின் தேவை அதிகரித்துள்ளதால் இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் மற்றும்  கார்பன் நிறுவனங்களின் அலைபேசிகள் இந்தத்துறையில் சக்கைப்போடு போடுகின்றன.  இப்பொழுது இவ்விரு நிறுவனங்களும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி விற்பனையில் முன்னுக்கு வந்துள்ளன.


ஃபேஸ்புக் shared albums எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்மூலம் நண்பர்கள் தங்கள் புகைப்படங்களைப் குழுவாக புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளளாம்.

ஆப்பிளின் ஐஃபோன் 5S(iPhone 5S) மிக அதிகமான செயலாக்குத்திறனுடன்(Processing power) கூடிய A7-சிப்புடன் வெளிவரக்கூடும் என நம்பப்படுகிறது.  இது இந்த நுண்ணிறிபேசியின் செயல்திறனை 31% வரை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

யாகூ தேடியந்திர நிறுவனம் புகைப்படங்களை தேடித்தரும் பணியினைச் செய்யும் சிறுநிறுவனமான IQ Engines எனும் நிறுவனத்தை கையப்படுத்தியுள்ளது.

சாம்சங் நிறுவனம் குழந்தைகளுக்காக கேலக்ஸ் டேப் 3 (Galaxy Tab 3) என்கிற டேபை அறிமுகப்படுத்தவுள்ளது.

சிரிய(Syria) நாட்டைச் சேர்ந்த கொந்தர்களால்(hacker) நியுயார்க் டைம்ஸ் மற்றும் டிவிட்டர் தளங்கள் முடக்கப்பட்டன.






No comments:

Post a Comment