Thursday, September 12, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(01-09-13 முதல் 07-09-13வரை)


இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் முக்கியப் பெரு நிறுவனமான விப்ரோ, இளங்கலை மாணவர்கள் தங்கள் தொடர்பு மற்றும் மென் திறமைகளை(Communications & Soft skills) வளர்த்துக்கொள்ள ஒரு திட்டத்தினை உருவாக்கியுள்ளது.  விப்ரோ ஒருங்கிணைந்த திறமை வளர்ப்பு திட்டம்(WISEPro - Wipro Integrated Skill Enhancement Programme) எனப்பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் ஒரு நாடு தழுவிய திட்டம் ஆகும்.

வங்கியிடம் இருந்து வந்த ஈ-மெயில் போன்ற பொய்யான/போலி மெயில்களுக்கு 30% பேர் பலியாவதாக எதிர்-நச்சுநிரல் தயாரிப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை(Kaspersky) கருத்துக்கணிப்பு தெரிவிட்டுதுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னணி(ஓரு காலத்தில் என்று கூட சொல்லலாம் :P )கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை கையகப்படுத்தியுள்ளது.

99.9% சதவீத மால்வேர்(malware)கள் கூகுளின் ஆண்ட்ராய்டு நுண்ணறிபேசி இயங்குதளத்தை குறிவைத்து தயாரிக்கப்படுவதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் நுண்ணறி கடிகாரமான கேலக்ஸி கியரில் (Galaxy Gear) அனைத்து முக்கிய இந்திய மொழிகளையும் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.

நுண்ணறி அலைபேசிச் சந்தையை அடுத்து அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது நுண்ணறி கைக்கடிகாரம் தயாரிப்பில் முழுமூச்சாக இறங்கியுள்ளன.  அந்த வரிசையில் குவால்காம்(Qualcomm) நிறுவனம்  டாகு(Toq) என்ற பெயரில் ஒரு கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சோனி இந்தியா நிறுவனம் அதன் அலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகளின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்திய உருவாக்குனர்களுக்காக(developers) ஒரு தனிப்பட்ட இணைய வலைவாசலை(web portal) உருவாக்கியுள்ளது.

சாம்சங் நிறுவனம் 3.25 லட்சம் விலையில் அல்ட்ரா-எச்டி(Ultra-HD) தொலைக்காட்சிப் பெட்டிகளை வெளியிட்டுள்ளது.

கூகுள் குரோம் உலாவியில் செயல்படும் செயலிகள் [ஆப்கள்(Apps)] இனி மேசைக்கணினியின் பணிமேடையிலும் செயல்படும் வகையில் எழுதப்படவுள்ளது. லைப்ஹேக்கர் இணையதளததில் இது குறித்தப் பதிவு

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பு 4.4 கிட்கேட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எச்டிசி நிறுவனம் இந்திய ரூபாய் 52,428 விலையில் பட்டர்பிளை S நுண்ணறி அலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சமூக வலைதளங்களில் நுண்ணறிபேசி மூலம் பங்கெடுக்கும் பயனர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளதாக சமூக வலைதள கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

பிளாக்பெரி இந்தியாவின் புதிய தலைவராக சுனில் லால்வனி பொறுப்பேற்கிறார்.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு 

1 comment:

  1. Hey Thanks for sharing this blog its very helpful to implement in our work

    Regards

    LANDSCAPE COMPANY IN MUMBAI

    ReplyDelete