Friday, November 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(06-10-13 முதல் 12-10-13வரை)

இணையதளத்தில் வெளியிடப்படும், எளிதில் விளைவுகளை ஏற்படுத்தும்(sensitive) தகவல்களை கவனிப்பதற்காக சீனா சுமார் 2 மில்லியன் நபர்களை நியமித்துள்ளதாக அறியப்படுகிறது.

தகவல் பரிமாற்ற செயலியான லைன்(Line) 2013-ம் ஆண்டில் தனது இந்திய பயனர்களின் எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டும் என்று கூறியுள்ளது.

எல்ஜி(LG) நிறுவனம் தனது முதல் குளிகைக் கணினியை(Tablet pc) 8.3 இன்ச் அளவில் ஜி பேட்(G Pad) என்கிற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது நிகழ்பட சேவையான யூ-டியூப்-ஐ மேலும் பிரபலப்படுத்தும் விதமாக டிடிஎச்(DTH) வாயிலாக இந்திய தொலைக்காட்சி பயனர்களிடம் யூடியூபை(Youtube) கொண்டு சேர்க்க முயன்று வருகிறது.

கூகுள் தனது குரோம் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் மடிக்கணிகளை எச்பி நிறுவனத்துடன் சேர்ந்து தரவிருக்கிறது.  இது எச்பி குரோம்புக் 11 என்று பெயரிடப்பட்டுள்ளது.

கூகுளின் ஹேங்அவுட்(Hangout) தனது புதிய மேம்பட்ட பதிப்பில் குறுஞ்செய்தி, பல்லூடக செய்தி(MMS) போன்ற சேவைகளையும் தரவுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரவுண்ட்(Galaxy Round) அலைபேசியை வளையக்கூடிய திரையுடன் தயாரித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் தனது ஆராய்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது.  மேலும், அப்பணியாளர்களை சேவைத்துறைக்கு மாற்றவுள்ளதாகவும் தெரிகிறது.

சாம்சங் இந்திய ரூபாய் சுமார் 28 லட்சத்தில் தனது 85 இன்ச் அல்ட்ரா எச்டி தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இவ்வகை தொலைக்காட்சிகள் சாதாரண எச்டி தொலைக்காட்சிகளைவிட 4 மடங்கு சிறந்த காட்சிகளைத் தரவல்லது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எச்டிசி(HTC) லெனோவா(lenovo) நிறுவனத்தால் கையகப்படுத்தப்படலாம் என தகவல்கள் கசிகிறது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


No comments:

Post a Comment