Friday, January 17, 2014

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(05-01-14 முதல் 11-01-14 வரை)


இன்டெக்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதன் முதலாக octa-core (octa - எட்டு) அலைபேசியை அக்வா ஆக்டா(Aqua Octa) என்ற பெயரில் வெளியிடவுள்ளது.  இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 20,000 ஆகும்.

இணையதள பாதுகாப்பு நிறுவனங்கள் யாஹூ மெயில் பயனர்கள் மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளன.

இன்டெல் நிறுவனம் எடிசன் என்கிற பெயரில் நினைவு சிப்(SD Card) அளவுடைய  கணினிகளை உருவாக்கியுள்ளது.  மேலும், இது குவார்க் (Quark) புராசசரில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டெல் நிறுவனம் அணிகணினி (Wearable computing devices) தயாரிப்பில் பெரியதொரு பங்கினை தரவிருப்பதாக தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்டின் தலைமைச் செயல் அதிகாரிப் பதவிக்கானப் போட்டியிலிருந்து போர்டு நிறவனத்தின் முல்லாலே விலகியுள்ளார்.

யாஹூ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான மரிசா மேயர் யாஹூவின் பயனர்களில் (கிட்டத்தட்ட 800 மில்லியன் பயனர்கள்) யாஹூவை தங்கள் அலைபேசிகள் மூலம் அணுகுவதாக தெரிவித்துள்ளார்.

கணினி, பலகைக்கணினி (அ) சிலேட்டு கணினி, நுண்ணிறி அலைபேசிகள், அலைபேசிகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விற்பனை/ஏற்றுமதி 2014-ம் ஆண்டில் 7.6 % அதிகரிக்கும் என்று கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேனாசோனிக் நிறுவனம் 4K கணினித்திரை பிரிதிறன் (Resolution) உடைய அணித்துகொள்ளக்கூடிய நிகழ்பட பதிவுக்கருவியை(Video Recorder) அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் லேப் டேப்(லேப்டாப் அல்ல - Lap Tab) என்று புதிய மின்ணணு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் சிறப்பம்சமாக இதில் விண்டோஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளங்கள் நிறவப்பட்டுள்ளதோடு விசைப்பலகையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  இது பிப்ரவரியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்போசிஸ் நிறுவனம் பெங்களூருவில் உள்ள எஸ்ஸார் குழுமத்தின் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை 115 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

கூகுள் நிறுவனம் கார் தயாரிப்பு நிறுவனங்களான ஆடி, ஜெனரல் மோட்டார்ஸ், ஹோண்டா போன்றவற்றுடன் இணைந்து ஆன்ட்ராய்டுடன் கூடிய கார் தயாரிப்புக்கான கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

62% அலைபேசி செயலி உருவாக்குனர்கள் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தையே தங்கள் முதல் முன்னுரிமையாக கொள்கிறார்கள் என அறியப்படுகிறது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

No comments:

Post a Comment