வாழ்வில் மேலும் மேலும் முன்னேற எல்லோரும் மேற்(படிப்பு) படிக்கின்றனர். பள்ளிவரை தமிழில் படித்தவர் கூட கல்லூரியில் ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். தமிழ்மீது தீராத காதல் கொண்டவர்கூட மேற்படிப்பில் நிர்பந்தத்தின் காரணமாக ஆங்கிலத்தில் படிக்க நேரிடுகிறத்து. அந்தச் சமயத்தில் பணத்துக்காக தன் காதலியை கைகழுவிவிடுபவன் போல சற்றும் வெட்கமின்றி தன் தாய்மொழியாம் தமிழை கைவிட்டுவிடுன்றனர். அதற்கு காரணமாக நான் காலத்தோடு இயைந்து வாழ்கிறேன் என்று கதை வேறு.
சீனர்களும், ஜப்பானியர்களும் நம்மைவிட தொழில் நுட்பத்தில் மூத்தோர்களாய் இருக்கின்றனர் காரணம் ஒன்றே ஒன்றுதான் அவர்கள் அனைவரும் எந்தப் பாடமாயிருப்பினும், தொழில்நுட்பமாயிருப்பினும் தம் தாய்மொழியிலேயே கற்கின்றனர். ஒரு கருத்தில் நான் மிக உறுதியாய் இருக்கின்றேன், எந்தவொரு மனிதனும் வேறந்த மொழியைவிடவும் தன் தாய் மொழியில் எந்தவொருவிஷயத்தையும் தெளிவாகவும், ஆழமாகவும் புரிந்துகொள்ளலாம். அதனால்தான் ஜப்பான் தொழில்நுட்பத்ததில் அமெரிக்காவிற்கே சவால் விடுகிறது. மூளைவளம் உள்ள இந்தியா அடிமைபோல் அதற்கு சேவகம் செய்கிறது.
ஒரு தமிழன் ஜப்பானுக்கு வேலைக்குச் செல்ல ஜப்பானிய மொழியையும், சீனத்ததிற்கு செல்ல சீனமொழியையும் கற்கிறான். தமிழ்நாட்டில் வேலைசெய்ய ஆங்கிலம் கற்கும் அவலம் நம் தமிழ்நாட்டில் தவிர (இந்தியா) வேறெங்கும் நடக்காது. கேட்டால் இங்கு எனக்கு வேலையில்லை, நான் என் வாழ்வை வளமாக்க மேலைநாட்டுக்கு செல்கிறேன் என பதில் வருகிறது. ஏன் வேலை தேடுகிறாய் உருவாக்கு. அமெரிக்க NASA-ல் 35% மேல் இந்தியர்கள் உள்ளனர். அமெரிக்க Microsoft -ல் 40% மேல் இந்தியர்கள். பில்கேட்ஸே தன் திருவாய் மலர்ந்து தனது கம்பெனியில் வேலைபுரியும் இந்தியரனைவரையும் அமெரிக்க அரசு வெளியேற்றினால் நான் எனது கம்பெனியையே இந்தியாவுக்கு மாற்றிவிடுவேன் என்கிறார்.
ஜப்பானில் வேலை பார்க்க ஜப்பானிஸ் கற்கும் தமிழன் தன் தாய்மொழி தமிழை வெறுத்து ஏதோ பேசத் தகாத வார்த்தைபோல் கூனுகிறான். இது தன் வீட்டில் சுடச்சுட உணவிருக்கையில் பழைய எச்சில் சோற்றுக்கு கையேந்தும் நிலைக்கு ஒப்பாகும். 247 எழுத்துக்கொண்ட உலகில் தொன்மையான, இயற்கையோடு இயைந்து உருவான தமிழை கற்க வெறுத்து 1000-த்திற்கும் மேற்பட்ட எழுத்துகொண்ட சீன, ஜப்பானிய மொழியைப் பேசத்துணிகிறான் தமிழன். தாய்மொழியில் பேசினால் தண்டனைதரும் அவலங்கள் நடந்தேரும் பள்ளிக்கோயில்கள் பலநிறைந்த புண்ணிபூமி தமிழகம், ஆள்வோரும் அதை ஆதரித்தது வளர்க்கும் அற்புதம் நிறைந்த பெரும் பேரருள் நிறைந்த புண்ணிய பூமி தமிழகம். தொன்மையும், இலக்கண, இலக்கிய வளமும் நிறைந்த இளமை குன்றாத மொழி தமிழ். பல ஆயிரக்கணக்கான மொழிகள் கால ஓட்டத்தில் முதலில் வரி வடிவமிழந்து, பின்னர் ஒலிவடிவிழந்து இறுதியில் வழக்கொழிந்து போய் விட்ட காலத்தில், தன்னின்று பல மொழிகளை உருவாக்கி தன் தனித்தன்மை சிறிதும் குன்றாமல் சிற்சில மாற்றங்களை ஏற்று "என்றும் பதினாறாய்" மொழியுலகின் மார்கண்டேயனாய் தமிழ்மட்டும் திகழ்கிறது.
மெல்லத் தமிழ் இனிச் சாகும் - பாரதிதாசன்
தமிழ் சாகாது, சொல்கிறவர்கள் சாவார்கள் - மு. மேத்தா
இரண்டில் எது நடக்கும்.....? காலம் மட்டுமே பதிலை அறியும்.
(அங்களாய்ப்பில் மனம் வெதும்பி பாரதிதாசன் அப்படிக் கூறியிருப்பார். தமிழ் சாகின்ற ஒரு நிலை வருமென்றால் - அது உலகின் கடைசி மனிதன் சாக நேரும்போதுதான் நடக்கும்...)
குறிப்பு:
இந்தக் கட்டுரையும் குறைந்தது ஒரு 6 வருடங்களுக்கு முன்பு எழுதியது, அதில் நான் திருத்தமேதும் செய்யாமல் அப்படியே இந்த இடுகையில் தந்துள்ளேன்.
உங்கள் வாழ்த்துகள், வசவுகள் ஏதாவது இருந்தால் இரண்டையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... ;)
No comments:
Post a Comment