"நெடு நாட்களாகத் தேடப்பட்டு வந்த தொடர் கொலைகாரன் மதியழகனை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்"
"இந்த உலகம் அதிபுத்திசாலிங்களுக்கு மட்டும்தான் சொந்தமாமே, அறிவாளிங்க மட்டுதான் வாழனும் அதனால மத்தவங்களலாம் இவரு கொன்னுடுவாராமே... இவனை கொண்டுபோய் அந்தப் பய கூடவே போடுங்க... எக்கேடும் கெட்டு ஒழியட்டும்" அடித்தொண்டையில் கத்தினார் இன்ஸ்பெக்டர் கரிகாலன்.
"க்றீச்" என்ற சத்தத்தோடு கதவு மூடி பூட்டப்பட்டது.
ஹூம்... அறிவையும் மதிநுட்பத்தையும் பத்தி இவங்களுக்கு எங்க புரியப்போகுது..? அடிப்படை அறிவு கூட இல்லாதவங்கலாம் எதுக்கு உயிரோட இருக்கனும் பூமிக்கு பாரமா? அவங்கலாள யாருக்கு என்ன லாபம்? இந்த மாதிரி அறிவில்லாம அன்பு, பாசம், கருணைனு பேசறவங்களால தான் நம்ம நாடு இன்னமும் பின் தங்கி இருக்கு... அதான் கொன்னேன் இது தப்பா? எதிரிலிருந்தவனிடம் பேசினான் மதியழகன்.
எதிரிலிருந்தவன் சினேகமாய் சிரித்தான்.
இந்த இடத்துல இருந்து தப்பிக்க எனக்கு எவ்வளோ காலம் ஆயிடப்போகுது? அன்பாம் பாசமாம் கருணையாம்... ஆஆ.... ஹ்க்.. ஹ்க்...
மதியழகன் தொண்டைக்குழிக்கு மேலே சிறு பிளவுடன் இரத்தம் தெறித்துக்கொண்டிருந்தான்...
'உன்னமாதிரி அன்பே இல்லாதவனுக்கு இந்த உலகத்துல இடம் கிடையாதுடா...' கத்தியை துடைத்துக்கொண்டிருந்தான் எதிரிலிருந்த தொடர் கொலைகாரன் அன்பழகன்.