அவளும் மென்பொறியியல் தான்
அலுவலகம் கூட என் அலுவலகத்தின் எதிரில்தான்
அவள் அழகுக்கும் குறைவில்லைதான்
அனுதினமும் மின்தூக்கியில் அருகேதான்
ஆண்டுகளாய் இதே நிலைதான்
ஆனாலும், " நீ அழகாய் இருக்கிறாய் " என்று
சொல்லவில்லை தான்(நான்)
...
அடுத்த மொழி
...
வார இறுதியில் எல்லாம் ஊருக்குச் செல்வேன்
வாரம் தவறாமல் குருவாயூர் இரயிலில் திரும்புவேன்
வாராவாரம் அவளும் வருவாள்
இருவருக்குமே ஒதுக்கீடில்லா பயணச்சீட்டுதான்
இடம் கிடைத்ததும் அமர்ந்துவிடுவாள்
ஆங்கில நாவல் உண்டு அவளுக்கு
அழகுதமிழ் நூலகப் புத்தகம் உண்டு எனக்கு
அமைதியோடு அழகு கொஞ்சும் முகம் அவளுக்கு
அவளோடு பேசிட துடிக்கும் அகம் எனக்கு
நாட்கள் ஆண்டுகளாய் ஆயின நித்தம்
எனக்குள் பேசா மொழிகள் தான் மிச்சம்
என் பேசா மொழிகளை எல்லாம்
சேர்த்துக்கொண்டே வருகிறேன்
கோடைகால எறும்பு போல
வசந்தகால தேனீ போல
பேசித் தீர்க்கும் நாளுக்காகவும், ஆளுக்காகவும் ;)
( பேசித்தீர்க்க ஆள் கிடைச்சாச்சு...... :) :D பேசிக்கொண்டிருக்கிறேன், என்றும் தீராமல் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற பேராவலுடன்.... )
என் பேசா மொழிகளை எல்லாம்
ReplyDeleteசேர்த்துக்கொண்டே வருகிறேன்
கோடைகால எறும்பு போல
வசந்தகால தேனீ போல
Arumai..
Thanks da மச்சான்... :) இனிமே ஊருக்குள்ள என் blog-அ அமெரிக்கால கூட படிக்கிறாங்கோ சொல்லலாம்ல... அப்றம் எப்ப மத்த நாட்டுக்குளாம் போனாலும் மறக்காம நம்ம blog-a படிச்சிடு... ஒரு வெளம்பரம். ;)
Delete