Wednesday, April 17, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(07-04-13 முதல் 13-04-13வரை)

மொபைல் உலகில் மிகப்பிரபலமான வாட்ஸ்ஆப்(WhatsApp) செய்திப் பரிமாற்றியை(Messanger app) சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு(100 கோடி * 55 இந்திய ரூபாய் மதிப்பிற்கு, அதாவது 5500 கோடி ரூபாய்) கையகப்படுத்த கூகுள் முயன்றுவருவதாக தகவல்கள் கசிகின்றன.  உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு வாட்ஸ்ஆப்பை பதிவிறக்க

இந்தியாவின் மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்(TCS) பிரான்ஸைச் சேர்ந்த அல்டி(Alti) என்கிற தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தை 530 கோடி இந்திய ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளது.

சாம்சங் 20 புதிய ஸ்மார்ட் டிவிக்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

பிஎஸ்என்எல்(BSNL) தனது 4G இணைய சேவையை இந்தூரில் தொடங்கவுள்ளது.

லிங்க்டுஇன் நிறுவனம் 90 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கைபேசிகளில் பயன்படும் செயிலிகளை உருவாக்கும் மின்படிப்பான்(E-Reader) நிறுவனமான பல்ஸ்-ஐ(Pulse) கையகப்படுத்தவுள்ளது.

டிவிட்டர் இந்த வார இறுதியில் ஒரு இசை அப்ளிகேசனை வெளியிட உள்ளதாக தெரிகிறது.

கூகுளின் நிரலெழுதும் போட்டியான கூகுள் கோட் ஜாம் 2013(Google Code Jam-2013) ஏப்ரல் 12 அன்று துவங்கியுள்ளது.  பரிசுத்தோகை 15000 அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாஸ்காம் (National Association of Software and Services Companies (NASSCOM)) 25 லட்சத்திலிருந்து 2 கோடி ரூபாய் வரை 500 புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு(Tech Start-ups) ஏஞ்சல் இன்வெஸ்டார்கள்(Angel investors) மூலமாக நிதியுதவி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.  மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.10000startups.com.

மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுளின் நெக்ஸஸ், ஆப்பிளின் ஐபாட் மினி போன்றவற்றிற்குப் போட்டியாக சிறிய திரையுடைய(7 இன்ச்) சர்பேஸ் குளிகைக் கணிணிகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

4 கார்னகி மெல்லன் பல்கலைக்கழக மாணவர்களால் தொடங்கப்பட்ட பேடேங்கோ(PayTango) எனும் நிறுவனம், பண அட்டைகளான கடன் அட்டை(Credit Card), டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக கைரேகை மூலம் பணப்பரிமாற்றம், தொகை, கட்டணம் செலுத்தும் முறை ஒன்றை உருவாக்கியுள்ளது.  இம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும்.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->  இங்கே சொடுக்கவும்




No comments:

Post a Comment