Tuesday, September 17, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(08-09-13 முதல் 14-09-13வரை)


சாம்சங் தனது கேலக்சி நோட் 3-ஐ இம்மாத இறுதில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.



இணைய உலகில் கட்டுரைகள், செய்திகள் போன்ற பலவற்றிலும் கமெண்ட்(comment) எழுதும் இணைய பயனர்கள்(இளைஞர்கள்) 40% சதவீதம் பேர் தங்கள் அடையாளங்களை
மறைத்து அனானியாக(Anonymous) தான் எழுதிகிறார்கள் என Pew Research Centre study கூறியுள்ளது.

மத்திய அரசு இந்திய ரூபாய் 9,822 கோடி செலவில், ஏழை எளிய மக்களுக்கு 2.5 கோடி அலைபேசி மற்றும் 90 லட்சம் குளிகைக் கணினிகளை இலவசமாக தரவுள்ளதாக கூறியுள்ளதாக தெரிகிறது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் இருந்து)

சோனி நிறுவனம் வளைவான திரையுடன் கூடிய எல்ஈடி டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நாசா(NASA) நிறுவனம் இன்ஸ்டாகிராமில்(Instagram) ஒரு பயனர் கணக்கைத் தொடங்கி இணைந்துள்ளது.  தனது புகைப்படங்களைப் பதிவேற்றி சில லட்சம் பயனர்கள் பின்தொடர்பவர்களாப் பெற்றுவிட்டது.

பேஸ்புக் நிறுவனம், டிவிட்டர் போல நிஜ நேர(Real Time) தகவல்களைத் தரும்வகையில் தனது வடிவமைப்பை மாற்றி வெற்றி பெற்ற பிறகு, தற்போது லின்க்டுஇன் போன்று தொழில்முறை சார்ந்த(Professional) தகவல்களைக் கொண்டதாக தனது வடிவமைப்பை மேலும் மெருகேற்ற உள்ளதாக தெரிகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மிக முக்கிய, நீண்ட நாட்களாக புழக்கத்தில் இருந்து வருகிற மற்றும் அதிகம் பயன்படுத்தப்படுகிற தனது விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்திற்கான support(மற்றும் update)-ஐ அடுத்த ஆண்டிலிருந்து(2014) நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.  இதற்கு முன்னரே மத்திய அரசு நிறுவனமான சிடாக் தனது பாஸ் குனூ/லினக்சு இயங்குதளத்தை தமிழ்நாட்டின் பல அரசு அலுவலகங்களில் விண்டோசுக்கு மாற்றாக நிறுவிய நிலையில், மைக்ரோசாப்டின் இம்முடிவு பாஸ் லினக்ஸை மேலும் பரவலாக(இந்தியா முழுவதும் கூட) நிறுவ வழிவகுக்கும் எனலாம்.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐ-போன்கள் 5s மற்றும் 5c ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்தியாவும் சீனாவும் இதன் முக்கிய விற்பனை சந்தைகளாக/மையங்களாக இருக்கும் எனக் கூறியுள்ளது.

எச்பி நிறுவனம் HAVEn என்ற பெயரில் பெருந்தகவல்(BigData) பகுப்பாய்வியல் களம்/தளம்/மேடையை(Platform) அறிமுகப்படுத்தியுள்ளது.

நிசான் நிறுவனம் நிசான் நிஸ்மோ(Nissan Nismo) என்ற பெயரில் நுண்ணறி கைக் கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஒலிம்பஸ் நிறுவனம் முதன்முறையாக ஆடிகள்(லென்சுகள்) இல்லாத "OM-D E-M1" என்கிற கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது, அத்தோடு இது DSLR கேமராவுக்கு இணையான தரத்துடன் புகைப்படத்தை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போனில் பயோமெட்ரிக்(Biometric) முறையில் கைரேகையை வைத்து பூட்டவும்(lock) திறக்கவும்(unlock) கூடிய வகையில் வடிவமைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


சாம்சங் நிறுவனம் தனது நுண்ணறிபேசிகளில் 64-பிட்டு (64-bit) நுண்செயலிகளை(microprocessor) பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக், குரூப்ஆன் போன்று தற்போது டிவிட்டர் நிறுவனமும் தனது பங்குகளை வெளியிட்டு பங்குச்சந்தைக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

No comments:

Post a Comment