Monday, December 30, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(22-12-13 முதல் 28-12-13வரை)

தகவல் மைய(Data centre) பாதுகாப்பு என்பது 2014 -ம் ஆண்டின் அதிக முன்னுரிமை வாய்ந்ததாக இருக்கும் மெக்அஃபே நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆரக்கிள் நிறுவனம் மற்றொரு மென்பொருள் நிறுவனமான ரெஸ்பான்சிஸ் (Responsys) நிறுவனத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் அலைபேசி பயனர்களுக்கு 20 GB மேகக் கணிமை சேமிப்பு இடத்தை இலவசமாக வழங்கியுள்ளது.

அமேசான் நிறுவனம் கிறிஸ்துமஸ் சமயத்தில் பொருட்களை விநியோகிக்க ஆன காலதாமதத்திற்கு பரிகாரமாக $20  பரிசுக் கூப்பனையும், பொருட்களை விநியோகிக்க ஆகும் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(15-12-13 முதல் 21-12-13வரை)

சாப் நிறுவனம் தனது சப்ளை செயின் தயாரிப்பான கங்கை (Ganges) -ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் ரோபோக்களை உருவாக்கும் போஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) என்கிற நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக், டிவிட்டர் போன்று இந்தியாவில் இருந்து ஒரு புதிய மைக்ரோ பிளாகுகிங் சமூக வலைதளம் வெப்லர் (vebbler) என்கிற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.

2014-ம் வருடம் 16,000 இளநிலைப் பட்டதாரிகளை பணியமர்த்தவுள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் மற்றும் மைக்ரோ பிளாகுகிங் தளங்களைப் பயன்படுத்தி நிறுவனத்திற்கு ஆட்களை பணியமர்த்தும் முறை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

டிவிட்டர் விரைவிலேயே தனது கீச்சுக்களை மாற்றி/திருத்தி எழுதும் சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.  இது போன்ற சிறப்பம்சம் பேஸ்புக் கமெண்டுகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாம்சங் மற்றும் எல்ஜி இரண்டு நிறுவனங்களும் 105 இன்ச் உடன் வளைந்த திரையுடைய ஒஎல்இடி(OLED) தொலைகாட்சிப் பெட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(08-12-13 முதல் 14-12-13வரை)

எல்ஜி நிறுவனம் தனது வளைவான திரையுடைய நுண்ணறிபேசிகளை இந்தியாவில் டிசம்பரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஃபிளிப் கார்ட் நிறுவனம் செயல்படுத்திவரும் அதேநாளில் விநியோகம் (Same day delivery) அதற்கு நற்பெயரை ஈட்டித்தந்ததைத் தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனமும் இதைப் பின்தொடரந்து அதேநாள் விநியோக முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.

யாகூ நிறுவனம் நிகழ்பட ஓடை சேவையை (Video Streaming) வழங்கும் புதிதாய் தொடங்கிய நிறுவனமான குயிக்ஐஓ(QuikIO) நிறுவனத்தினை கையகப்படுத்தியுள்ளது.

இன்டெர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things (IoT) பற்றிய விளக்கத்திற்கு ) 2020 வாக்கில் 30 மடங்கு அதிகரிக்கும் என்று கார்டனர் நிறுவனம் கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராம் தனிப்பட்ட முறையில் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நுண்ணறிபேசிகளில் சக்கைப் போடு போட்ட விளையாட்டு செயலியான ஆங்கிரிபேர்ட்ஸ் விளையாட்டை உருவாக்கிய ரோவியோ நிறுவனம் தற்போது ஆங்கிரிபேர்ட்ஸ் கோ (angrybirds go)என்கிற பெயரில் கார் ரேஸ் விளையாட்டுச் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ட்ருகாலர் தனது பயனர்களை அதிகரிக்கவும் அவர்களின் ஆதரவைப்பெறும் வகையில் தற்போது டுவிட்டருடன் இணைந்து செயல்படவுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது வழங்கிக் கணினிகளுக்கான(Server computer) இயக்கிகளை (Processor) தானே தயாரிக்கவுள்ளதாக செய்திகள் கசிகின்றன.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


Sunday, December 29, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(01-12-13 முதல் 07-12-13வரை)

ஸோலோ நிறுவனம் Q500 என்கிற பெயரில் ஒரு புதிய நுண்ணறி அலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்னாப்சாட் என்கிற குறுஞ்செய்தி பேச்சுச் செயலி மிகவும் பிரபலமடைந்து வருகிறது.  மற்ற பேச்சு செயலிகளைப் போலின்றி இதில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட கால அளவுக்குப் பிறகு (சில வினாடிகள்) பெறுநரின் பக்கத்திலிருந்து மறைந்து விடுவதோடு, வழங்கிக் கணினியிலிருந்தும் அழிந்துவிடம்.

இதுவரை கணினிகளைக் குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்த கொந்தர்கள், தற்போது நுண்ணறி தொலைக்காட்சி, பாதுகாப்பு கேமராக்கள் போன்றவற்றை தங்கள் கட்டளைக்கு ஏற்றவாறு செயல்படவைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

ஒரு நபர் tag செய்யப்படாத புகைப்படங்களிலும் அவரை அடையாளும் காணும் வகையில் ஒரு புதிய அல்காரிதத்தை (Algorithm)  டோரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்/பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட லிட்டில் ஐ லேப்ஸ் (Litte Eye Labs) நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக அறியப்படுகிறது.

அமேசான் தனது கின்டில் ஃபயர் பலகைக் கணினிகளின் விலையைக் குறைத்துள்ளது.  தன்னுடைய 16 GB பலகைக்கணினியை ரூ. 18,000 மற்றும் 32 GB பலகைக்கணினியை ரூ 26,000 -க்கும் விற்கவுள்ளது.  இது அவற்றின் பழைய விலையை விட ரூ. 4000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் பலகைக்கணினிகளை உருவாக்கும் டேட்டா வைண்டு நிறுவனம் தனது யுபிஸ்லேட் சிலேட்டு கணினிகளுக்கு செயலிகளை உருவாக்குவதற்காக  ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

அமேசான் நிறுவனம் இந்தியத் தபால் துறையுடன் இணைந்து விநியோகத்தின்போது பணம் பெறுதல் (கேஷ் ஆன் டெலிவரி -Cash on Delivery) முறையில் தனது பொருட்களை விநியோகிக்க முயற்சித்து வருகிறுது.  இது நடைமுறை சாத்தியமானால் அமேசான் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தனது எல்லைகளை விரிவுபடுத்தி இந்தியாவில் தனது இருப்பை நிலைநிறுத்தி ஃபிளிப் கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இந்தியக் நிறுவனங்களுடன் விற்பனையில் மல்லுக்கட்டும்.

நௌக்ரி.காம்(Naukri.com) நிறுவனப் புகழ் இன்ஃபோ எட்ஜ்(InfoEdge) நிறுவனம் 10 கோடி ரூபாயை இணைய வழி கல்வி மற்றும் மதிப்பீட்டு நிறுவனமான ஆப்லெக்ட் லெர்னிங் சிஸ்டம்ஸ் (Applect Learning Systems) நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் போட்டியிடும் விதமாக தனது மேகக் கணிமைச் சேவைக்கான விலையை குறைத்துள்ளது.  இது அமேசானுக்கு நெருக்கடி தரக்கூடிய நிகழ்வாக தொழில்நுட்ப உலகில் பார்க்கப்படுகிறது.

ஏர்செல் நிறுவனம் அடுத்த 3-6 மாதங்களில் இந்தியாவில் தனது 4G சேவைகளைத் தரவுள்ளதாக அறிவித்துள்ளது.  பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்ததாக இந்தியாவில் 4G சேவைகளை இந்தியாவில் வழங்கவுள்ள 2-வது நிறுவனம் இதுவாகும்.

கூகுள் நிறுவனம் தனது குரோம் புக் (சாம்சங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது) இந்தியாவில் வெளியிடவுள்ளது, இதன்விலை இந்திய ரூபாய் சுமார் 27,000 ஆக இருக்கும் எனத் தெரிகிறது.

சாம்சங் நிறுவனம் தனது இருபுறமும் ஒளிபுகக்கூடிய திரைக்கு(transparent dual side screen) காப்புரிமைப் பெறவுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Monday, December 16, 2013

மினி கதைகள்-2 - பேங்க் லோன்

"டேய், பிரகாஷ் எப்படிடா இருக்க...? தொப்பலாம் போட்டுடிச்சி... ஹூம் கல்யாணம் பண்ணிட்டியாடா?" ஏழு வருட இடைவெளிக்குப் பின்னால் நண்பனைக் கண்ட சந்தோஷத்தில் கண்ணடித்து கேட்டான் நாகராஜன்.

"மாப்ள.. நல்லாருக்கேன் டா..., நீ எப்டி இருக்க?" என்றான் பிரகாஷ் கையிலருந்த பைலை பின்னால் மறைத்தபடியே..

"அப்றம், பேங்குக்கு வந்திருக்க..."

"ஆமான்டா ஒரு லோன் விஷயமா வந்தேன்.."

"நான் தான்.." என்ற நாகராஜன் முடிப்பதற்குள்..

பிரகாஷ் தொடர்ந்து.. " என்னடா பேங்கு இது... ஒரு A.C இல்ல.. எப்டி sweat ஆகுது பாரு..  சென்னைல எங்க ஆபிஸ்ல பாத்ரூம் கூட A.C"

"விடுடா இது என்ன சென்னையா? இல்ல உன் ஆபீஸா? நம்மூருதான... ஆமா நீ ஏன் இப்டி feel-பண்ற... நாமலாம் ஸ்கூல் கிரவுண்டல லீவுநாள்ல மதியமானா 12, 1 மணினு கூட பாக்காம வேகாத வெயில்ல.." என்று நாகராஜன் முடிப்பதற்குள்,

"டேய் நாகு, உன் கலர் பாரு என் கலர் பாரு,  இப்ப நான் போட்ருக்க சட்ட arrow brand.. 1600 Rupees தெரியுமா? இதுல (இவன் வேற.. )இந்த sweating வேற.."

நாகராஜன், "சரி விடு அது என்ன கைல? Form 16.. Gross Total Inco.."

"டேய் அதுலாம் உனக்கு புரியாது... நீ என்ன பணம் எடுக்க வந்தியா.. ? உனக்கு எப்படியும் ஏடிஎம் கார்டு இருக்காது... செல்லான் ஃபில் பண்ணிட்டு போய் க்யூல நில்லு...
ஆமா, ஸ்கூல் அப்புறம் நான் B.E முடிச்சிட்டு சென்னைல Software Engineer ஆயிட்டேன்.. நீ என்ன BA தமிழா? B.Sc பாட்டனியா? இல்ல +2 வோட நின்டியா?" நக்கலாக கேட்டான் பிரகாஷ்.

சிரித்துக்கொண்ட நாகராஜன், "ஏன்டா Enginnering படிச்சு Software Engineer ஆனவன் மட்டுந்தான் மனுசனா? இல்ல BA தமிழ், பாட்டனிலாம் படிப்பே இல்லேங்கறியா...?"

"அப்டி இல்லடா... நான் என்ன சொல்ல.." என்று பிரகாஷ் முடிப்பற்குள்.

"சரிடா வீட்ல எல்லாரையும் விசாரிச்சதா சொல்லு, வரேன்" என்று சொல்லிவிட்டு நாகராஜன் பேங்குக்குள் நுழைந்தான்.

AC இல்லாத வங்கியையும், வியர்வையையும் சில நிமிடம் சபித்துவிட்டு, தன் Arrow brand சட்டையை சரிசெய்து கொண்டு பிரகாஷும் உள்ளே நுழைந்தான். காலியாக இருந்த "May I Help You " டெஸ்கில் சிறிது நேரத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து உட்கார்ந்தாள்.

"Excuse me, I am Prakash.  I want to meet Manager regarding Home Loan"

"Yes, Please.  ஆங்.. மேனேஜர் இப்ப தான் வந்தாரு, நீங்க மீட் பண்ணலாம் போங்க.... First right then stright" விரலில் அபிநயம் பிடித்தாள்.

"டொக் டொக்.. May I come in sir?"

"Yes, come in.." கதவு திறுந்து உள்ளே நுழைந்தான் பிரகாஷ்...

டேபிள் மேலிருந்த போர்டு
" நாகராஜன் M.Com.,
  மேலாளர்.  "  என்று வரவேற்றது.