மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட ஃபேஸ்புக்கின் ஃபேஸ்புக் ஹோம்(Facebook Home) ஆண்ட்ராய்டு ஆப்(App) வெளியிடப்பட்ட 3 மூன்று வாரங்களில் பயனர்களிடமிருந்து எதிர்மறையான பின்னூட்டங்களையேப் பெற்றுள்ளது. கூகிளின் பிளே ஸ்டோரில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இதற்கு 1 நட்சத்திர (மொத்தம் 5 நட்சத்திரம், அதாவது 1/5 மதிப்பீடு) மதிப்பையே வழங்கியுள்ளனர்.
வாட்ஸ்ஆப் போன்ற நுண்ணறிபேசி குறுந்தகவல் பரிமாற்றிகளால் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை வழமையான குறுஞ்செய்தி அனுப்பும் எண்ணிக்கையைவிடக் கூடியுள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் தனது கூகுள் நவ்(Google Now) எனும் பேச்சு சார்ந்த நுண்ணறி தேடல் மற்றும் இன்ன பிற காரியங்களைச் செய்யும் ஆண்ட்ராய்டு அப்ளிகே ஷனை முன்னரே அறிமுகப்படுத்தியிறுந்தது. தற்போது இதை ஆப்பிளின் ஐபோனுக்கும் இலவச ஆப்(App) ஆக தரவுள்ளது. ஆப்பிளும் கூகுள் நவ் போல சீரி(Siri) என்ற பெயரில் பேச்சு சார்ந்த ஒரு தேடலை அறிமுகப்படுத்தியிருந்தது ஆனால் அது கூகுள் நவ் போல் சிறப்பானதாக இல்லை.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1 மேசைக் கரண்டி தண்ணீர் மூலம் மொபைல், கேமரா போன்ற மின் சாதனங்களுக்கு மின்னேற்றம் அளிக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். பவர்டெரெக்(PowerTrek) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவி மூலம் 3 வாட் வரை மின்சாரம் தரமுடியும் எனக் கூறப்பட்டள்ளது.
இந்திய நுண்ணறிபேசி(SmartPhone) தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ்(Micromax) தனது முதல் முப்பரிமாண(3D display) திரையுடன் கூடிய நுண்ணறிபேசியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேன்வாஸ் 3D(Canvas 3D) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நுண்ணறிபேசியின் முப்பரிமாண அனுபவத்தைப் பெற தனியா கண்ணாடி எதுவம் தேவையில்லை. இதன் விலை இந்திய ரூபாய் 9,999 ஆக இருக்கும் போலத் தெரிகிறது.
மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->

No comments:
Post a Comment