Showing posts with label lumia. Show all posts
Showing posts with label lumia. Show all posts

Friday, November 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(29-09-13 முதல் 05-10-13வரை)

இன்டெல் நிறுவனம் கூகுளின் கிளாஸ் (Google glass)-க்குப் போட்டி நிறுவனமான ரெகான்(Recon) இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தில் அணிந்துகொள்ளும் கேட்ஜெட்(Gadget) ஆராய்சியில் முதலீடு செய்துள்ளது.

பேனாசோனிக்(Panasonic) நிறுவனம் 5000 இந்திய ரூபாய் விலையுள்ள அலைபேசிகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இந்திய அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கேட்டிருந்த தகவல்கள்(ஸ்கைப், ஹாட்மெயில் போன்ற கணக்குகளின் குறிப்பிட்ட பயனர்களின்), அந்நிறுவனத்தால் இந்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎம் நிறுவனம் தனது ஆளெடுப்பு செயல்பாட்டில்(Recruitment Process) மறுமாற்றம் செய்துள்ளது.

அல்-கொய்தா டிவிட்டரில் கணக்கை துவங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய 2014-ம் ஆண்டிற்கான இமேஜின் கப் (Imageine Cup) போட்டியை அறிவித்துள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் கூகுளிடமிருந்து $1,00,000 (இந்திய ரூபாய் சுமாராக 62.7 லட்சம்)சம்பளத்தில் பணியாணைப் பெற்றுள்ளார்.

கூகுள் நிறுவனம் இந்திய புது (அ) அறிமுக தொழில்நுட்ப நிறுவனமான ஃப்ளட்டர்(Flutter)-ஐ கையகப்படுத்தியுள்ளது.  இந்நிறுவனம் சைகைகளை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பவியலில் தனது பணிகளை செய்துவருகிறது.

எல்ஜி நிறுவனம் வளைவான திரையுடன் கூடிய நுண்ணறிபேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுளின் தேடல் வசதியானது மக்களை மறதிமிக்கவர்களாக மாற்றிவருவதாக ஆராய்சி முடிவு ஒன்று கூறுகிறது.

நோக்கியா தனது லூமியா 1020 வகை அலைபேசிகளுக்கான முன் பதிவை இந்திய ரூபாய் 49,999 என கூறியுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Tuesday, April 23, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(14-04-13 முதல் 20-04-13வரை)

நோக்கியா நிறுவனம் அதன் லூமியா 720 வகை கைப்பேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, விலை ரூபாய் 18,999 ஆக இருக்கும்.

ஆப்பிள் மற்றும் சாம்சங்கைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆஷ்டன் விருது வென்ற இந்திய விஞ்ஞானியான சன்டிபாடா கோன்சௌத்ரி, மத்திய அரசிடம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்(சிறிய சோலார் பேனல்களின் உதவியால்) சட்டையை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவைக்(Research proposal) கொடுத்துள்ளார்.  இச்சட்டை மூலமாக 400 வாட் மின்சாரம் வரை தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

1,20,000 ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான இலவச App-களில் பாதுகாப்பு வழு இருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.  இந்த இலவச App-களை கிட்டதட்ட 50 கோடி பயனர்கள் பயன்படுத்துகிறார்களாம்.

யாகூ நிறுவனம் புதிதாக வானிலையை கூறும் ஒரு App-ஐ வெளியிட்டுள்ளது.  மேலும், அதன் மின்அஞ்சல் App-ஐயும் மேம்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்(WhatsApp), க்கிக்(kik) போன்று ஒரு தகவல்/செய்தி பரிமாறும் App-ஐ just.me நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இதன் முக்கிய சிறப்பு மற்ற App-கள் போலில்லாமல், இதில் செய்தி அனுப்புபவரிடம் மட்டும் இந்த App இருந்தால் போதுமானது, இருவரிடமும் இருந்தேயாக வேண்டும் என்கிற அவசிமில்லை.

ஃபேஸ்புக் ஐஓஎஸ்-க்கான(iOS) புதிய SDK-ஐ(Software Development Kit) வெளியிட்டுள்ளது.  புகுபதிகை(login) வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது, உள்ளார்ந்த வரைபட(graph) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.  இதனால் ஐஓஎஸ்-க்கான ஃபேஸ்புக் App உருவாக்கும் நிரலர்கள் எளிதாக செய்து முடிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த சுமித் தாகர் என்பவர் பார்வைத்திறன் இல்லாதோர்/குறைபாடுடையோர்களுக்கான ஒரு நுண்ணறிபேசி(Smartphone)யை உருவாக்கியுள்ளார்.  இதனுடைய தொடுதிரை இதற்கு வரும் செய்திகளை பிரெய்லி முறையில் படிக்கும் விதமாக திரையை மேடு பள்ளம் கொண்டதாக(தொட்டு உணரும் பிரெய்லி எழுத்துருக்களாக) மாற்றிவிடும் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(siri) பேச்சு தொழில்நுட்பம், ஐபோன் பயனர்கள் அதற்கு அளிக்கும் பேச்சுக் கட்டளைகளை(Voice Commands) 2 வருடம் வரை பதித்து/சேமித்து வைத்துக்கொள்ளும் என அந்நிறவனத்தின் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார்.  சேமிக்கப்படும் இத்தகவல்கள் சிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே என கூறப்பட்டாலும், பயனர்களிடையே இது சிறு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் அதன் App-ல் இருந்து உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இலவசமாக அ(தொ)லைபேசும் வசதியை தந்துள்ளது.  தற்போதைக்கு இவ்வசதி அமெரிக்கா, கனடாவில் மட்டும் நடைமுறையில் உள்ளது.  விரைவில் மற்ற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

இந்தியாவில் சாம்சங் S4 ஏப்ரல் 26 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க -> இங்கே சொடுக்கவும்