Friday, November 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(27-10-13 முதல் 02-11-13வரை)

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கோல்டன்(Galaxy Golden) வகை அலைபேசிகளை இந்தியாவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.  இதன் விலை சுமார் 52,000 இந்திய ரூபாய்களாக இருக்கும்.

விப்ரோ(Wipro) நிறுவனம் தனது அலைபேசி குறித்தான ஆய்வு மற்றும் உருவாக்கத்திற்கான மையத்தை ஹைதராபாத் நகரத்தில் நிறுவவுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முக்கிய சேவைகளில் ஒன்றான யூடியூப் விலையுடன் கூடிய ஒர் இசைச்சேவையை அறிமுகப்படுத்த தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருட இறுதியில் (2014-டிசம்பர்) மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது 4ஜி வசதியுடன் கூடிய அலைபேசிகளை/கருவிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது.

அமேசான்(Amazon) நிறுவனம் தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது.

உலக அளவில் சமூக வலைதளங்களில் செலவிடப்படும் நேரத்தில் 65% அலைபேசிகளின் வாயிலாகவே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

30% அமெரிக்க மக்கள், செய்திகளை முகநூலின்(Facebook) வாயிலாகவே பெறுவதாக ஒர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த பிளாக்பெரி நிறுவனம் தனது புகழ்பெற்ற பிபிஎம்(BBM) பேச்சு செயலியை(Chat Application)  ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்ற மற்ற இயங்குதளங்களுக்கும் உருவாக்கியுள்ளது.  மேலும் இந்த செயலி 10 மில்லியனுக்கும் மேலான தடவை தரவிறக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

சேப்(SAP) நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி, தாங்கள் பிளாக்பெரியை வாங்குவதற்கான போட்டியில் (விருப்பம்) இல்லை என ஜெர்மன் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆப்பிள் தனது ஐஃபோன்6-ஐ 2014 வேனில் காலத்தில் வெளியிடவுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கூகுளும் நுண்ணறி கைக்கடிகார தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(20-10-13 முதல் 26-10-13வரை)

இணையவழி வணிகச்சேவை அளித்துவரும் ஸ்னாப்டீல்(snapdeal), 30% பொருள் கேட்பு ஆணைகள் (orders) அலைபேசி வாயிலாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனம் ஆன்ட்ராய்டு போலவே தனது விண்டோஸ் மொபைல் இயங்குதளத்துடன் கூடிய அலைபேசிகளை உருவாக்க எச்டிசி(HTC)  போன்ற அலைபேசி உற்பத்தியாளர்களிடம் கேட்டுவருவதாக அறியப்படுகிறது.

விண்டோஸ் மொபைல் இயங்குதளத்துடன் கூடிய நுண்ணறி அலைபேசிகள் விற்பனையில் 90% சதவீதம் நோக்கியாவின்(Nokia) தயாரிப்புகள் மட்டுமே என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மைக்ரோமேக்ஸ்(Micromax) நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி திரு. தீபக் மல்ஹோத்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ்(TCS) புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான பெருந்தகவல்(big data), மேகக்கணிமை(Cloud Computing), அலைபேசி தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக மேலாளர் திரு. என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களில் நட்சத்திர திறமையாளர்களுக்கு(Star Performers) போனஸ் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நுண்ணறி கைக்கடிகார(Smart Watch) தயாரிப்புப் போட்டியில் ஈடுபட்டுள்ள பல்வேறு பெருநிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது எச்டிசி நிறுவனம் இப்போட்டியில் இணைந்துள்ளது.  இதன் நுண்ணறி கைகடிகாரம் மற்ற நிறுவனங்களைப் போன்றே ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் இருந்தாலும், கூடவே கேமராவையும் உள்ளிணைத்து வரவிருக்கிறது.

நச்செதிர்நிரல்(Anti-Virus) தயாரிப்பு நிறுவனமான சிமேன்டெக்(symantec), இந்தியா 2013-ம் ஆண்டில் மட்டும் இணைய வழி ஏமாற்றாளர்களால் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (கிட்டத்தட்ட இந்திய ரூபாய் 24,630 கோடிகள்) இழந்திருப்பதாக தெரிவிக்கிறது.

ஆப்பிளின் ஆப் ஸ்டோர்(App Store) 1 மில்லியன் (10 லட்சம்) செயலிகளுடன் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

(தொழில்முறை) சமூக வலைதளமான லின்க்டுஇன்(LinkedIn), இந்தியாவில் மிகுதியாக விரும்பப்படும் தொழில்நிறுவனங்களாக அக்சென்சர்(Accenture), விப்ரோ(Wipro), இன்போசிஸ்(Infosys) ஆகிய நிறுவனங்களைக் குறிப்பிட்டுள்ளது.

யாஹூ நிறுவனம் புகைப்படங்களை அடையாளம் (Image recognition) காணும் தொழில்நுட்ப நிறுவனமான லுக்ஃபுளோ(LookFlow) என்கிற புதிய நிறுவனத்தை(startup) தனது புகைப்பட சேவையான ஃபிளிக்கருக்காக(Flickr) கையகப்படுத்தியுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(13-10-13 முதல் 19-10-13வரை)

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப, மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ்(TCS) தனது ஆள்சேர்ப்பு(hiring) முறைமை திட்டங்களை மாற்றியுள்ளதாக தெரிகிறது.

2013-ம் ஆண்டின் இந்தியாவின் மிக கவர்ச்சிகரமான அலைபேசி வணிக நிறுவனமாக "சாம்சங் " உள்ளதாக Trust Research Advisory (TRA) ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

ஆன்ட்ராய்டு கிட்கேட்(KitKat) அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

நுண்ணறி கைக்கடிகார சந்தையில் புதிய போட்டியாளராக அடிடாஸ்(adidas) நிறுவனமும் களமிறங்கியுள்ளது.  சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த ஒரு அலைபேசி மாநாட்டில் இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுளத்து.

இந்திய அலைபேசி தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் தனது பிராண்டை(Brand) மேலும் பிரபலபடுத்துவதற்காக ஹாலிவுட் நடிகரான ஹக் ஜேக்மேனை(Hugh Jackman) தனது வணிகத் தூதராக(Brand Ambassador) நியமித்துள்ளது.  இவர் X-Men series திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு நிறுவனமான சிடாக்(CDAC - Centre for Development of Advanced Computing) ஐகேன்(ICANN - Internationl Corporation for Assigned Names and Numbers) உடன் இணைந்து இணைய வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத்தை வளர்க்க ஒரு மையத்தை உருவாக்கவுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(06-10-13 முதல் 12-10-13வரை)

இணையதளத்தில் வெளியிடப்படும், எளிதில் விளைவுகளை ஏற்படுத்தும்(sensitive) தகவல்களை கவனிப்பதற்காக சீனா சுமார் 2 மில்லியன் நபர்களை நியமித்துள்ளதாக அறியப்படுகிறது.

தகவல் பரிமாற்ற செயலியான லைன்(Line) 2013-ம் ஆண்டில் தனது இந்திய பயனர்களின் எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டும் என்று கூறியுள்ளது.

எல்ஜி(LG) நிறுவனம் தனது முதல் குளிகைக் கணினியை(Tablet pc) 8.3 இன்ச் அளவில் ஜி பேட்(G Pad) என்கிற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது நிகழ்பட சேவையான யூ-டியூப்-ஐ மேலும் பிரபலப்படுத்தும் விதமாக டிடிஎச்(DTH) வாயிலாக இந்திய தொலைக்காட்சி பயனர்களிடம் யூடியூபை(Youtube) கொண்டு சேர்க்க முயன்று வருகிறது.

கூகுள் தனது குரோம் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் மடிக்கணிகளை எச்பி நிறுவனத்துடன் சேர்ந்து தரவிருக்கிறது.  இது எச்பி குரோம்புக் 11 என்று பெயரிடப்பட்டுள்ளது.

கூகுளின் ஹேங்அவுட்(Hangout) தனது புதிய மேம்பட்ட பதிப்பில் குறுஞ்செய்தி, பல்லூடக செய்தி(MMS) போன்ற சேவைகளையும் தரவுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரவுண்ட்(Galaxy Round) அலைபேசியை வளையக்கூடிய திரையுடன் தயாரித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் தனது ஆராய்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது.  மேலும், அப்பணியாளர்களை சேவைத்துறைக்கு மாற்றவுள்ளதாகவும் தெரிகிறது.

சாம்சங் இந்திய ரூபாய் சுமார் 28 லட்சத்தில் தனது 85 இன்ச் அல்ட்ரா எச்டி தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இவ்வகை தொலைக்காட்சிகள் சாதாரண எச்டி தொலைக்காட்சிகளைவிட 4 மடங்கு சிறந்த காட்சிகளைத் தரவல்லது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எச்டிசி(HTC) லெனோவா(lenovo) நிறுவனத்தால் கையகப்படுத்தப்படலாம் என தகவல்கள் கசிகிறது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(29-09-13 முதல் 05-10-13வரை)

இன்டெல் நிறுவனம் கூகுளின் கிளாஸ் (Google glass)-க்குப் போட்டி நிறுவனமான ரெகான்(Recon) இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தில் அணிந்துகொள்ளும் கேட்ஜெட்(Gadget) ஆராய்சியில் முதலீடு செய்துள்ளது.

பேனாசோனிக்(Panasonic) நிறுவனம் 5000 இந்திய ரூபாய் விலையுள்ள அலைபேசிகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இந்திய அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கேட்டிருந்த தகவல்கள்(ஸ்கைப், ஹாட்மெயில் போன்ற கணக்குகளின் குறிப்பிட்ட பயனர்களின்), அந்நிறுவனத்தால் இந்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎம் நிறுவனம் தனது ஆளெடுப்பு செயல்பாட்டில்(Recruitment Process) மறுமாற்றம் செய்துள்ளது.

அல்-கொய்தா டிவிட்டரில் கணக்கை துவங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய 2014-ம் ஆண்டிற்கான இமேஜின் கப் (Imageine Cup) போட்டியை அறிவித்துள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் கூகுளிடமிருந்து $1,00,000 (இந்திய ரூபாய் சுமாராக 62.7 லட்சம்)சம்பளத்தில் பணியாணைப் பெற்றுள்ளார்.

கூகுள் நிறுவனம் இந்திய புது (அ) அறிமுக தொழில்நுட்ப நிறுவனமான ஃப்ளட்டர்(Flutter)-ஐ கையகப்படுத்தியுள்ளது.  இந்நிறுவனம் சைகைகளை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பவியலில் தனது பணிகளை செய்துவருகிறது.

எல்ஜி நிறுவனம் வளைவான திரையுடன் கூடிய நுண்ணறிபேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுளின் தேடல் வசதியானது மக்களை மறதிமிக்கவர்களாக மாற்றிவருவதாக ஆராய்சி முடிவு ஒன்று கூறுகிறது.

நோக்கியா தனது லூமியா 1020 வகை அலைபேசிகளுக்கான முன் பதிவை இந்திய ரூபாய் 49,999 என கூறியுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு